பிக் பாஸ் 8: ஏற்கனவே பஞ்சாயத்தில் சிக்கிய அன்ஷிதா- அர்னவ்.. இப்போது என்னவாகுமோ!
சென்னை: மனைவியுடன் மல்லுக்கட்டி ஏற்கனவே பஞ்சாயத்தில் சிக்கிய சீரியல் நடிகர் அர்னவ் பிக் பாஸ் சீசன் 8ல் கலந்து கொள்வது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இந்த பஞ்சாயத்திற்கு காரணமான அன்ஷிதாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்.
சீரியல் நடிகரான அர்னவ், கேளடி கண்மணி சீரியலில் தன்னுடன் சேர்ந்து நடித்த சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதரை காதலித்து வந்தார். இருவரும் ஐந்து வருடத்திற்கும் மேலாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில், இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். நடிகை திவ்யாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி 5 வயதில் மகள் இருந்த நிலையில், முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு அர்னவை திருமணம் செய்து கொண்டார். மேலும், திருமணம் ஆகி கொஞ்ச நாட்களிலேயே தான் கர்ப்பமாக இருப்பதை திவ்யா அறிவித்தார்.

நடிகர் அர்னவ்: இந்த நேரத்தில், நடிகை திவ்யா,அர்னவ் தன்னை ஏமாற்றிவிட்டதாக திவ்யா பகீர் குற்றச்சாட்டை கூறி மீடியா முன் கதறினார். அதோடு அர்னவிற்கு செல்லம்மா சீரியல் நடிகை அன்ஷிதாவிற்கும் தொடர்பு இருப்பதாகவும், அதை கேட்டதற்கு அர்னவ் தன்னை தாக்கியதால் வயிற்றில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக கூறினார். இதன்பின் திவ்யா அளித்த புகாரின் பேரில், அர்னவ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பின் அவர் ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.
செல்லம்மா சீரியலில்: சிறையில் இருந்து வெளியே வந்த அர்னவ் தொடர்ந்து செல்லம்மா சீரியலில் நடித்து வந்தார். விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர், செப்டம்பர் மாதம் தான் முடிவுக்கு வந்தது. இந்த தொடரில் நாயகியாக நடித்துவந்த அன்ஷிதா குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் கோமாளியாக பங்குபெற்று வந்தார், தற்போது அந்த ஷோவும் முடிவுக்கு வந்துவிட்டதால், நடிகை அன்ஷிதா பிக்பாஸ் 8வது சீசனில் கலந்துகொள்ள இருப்பது உறுதியாகி உள்ளது.
அன்ஷிதா மட்டுமில்லாமல், செல்லமா தொடரில் நடித்த, அர்னவும் இதில் கலந்து கொள்ள இருக்கிறார். ஏற்கனவே இருவருக்கும் இடையே தவறான உறவு இருப்பதாக திவ்யா குற்றம்சாட்டிய நிலையில் இருவரும் தற்போது ஒன்றாக பிக் பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











