படமாகிறது செம்பை கதை... கர்நாடக இசை கலைஞர் ஆகிறார் மோகன்லால்

By

சென்னை: பிரபல கர்நாடக இசைக் கலைஞர் செம்பை வைத்தியநாத பாகதவரின் வாழ்க்கை கதை சினிமாவாகிறது.

பிரபலங்களின் வாழ்க்கைக் கதையை படமாக்கி வருவது இப்போதை டிரெண்ட். இந்திய வேகம், மில்கா சிங், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், டோனி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இப்போதைய பிரதமர் மோடி, நடிகர் என்.டி.ஆர், நடிகை சாவித்ரி உட்பட பல பிரபலங்களின் வாழ்க்கைக் கதைகள் படமாகியுள்ளன.

மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை உட்பட பலரின் கதைகள் படமாகி வருகின்றன.

கர்நாடக இசை பாடகர்

கர்நாடக இசை பாடகர்

அந்த வரிசையில் பிரபல கர்நாடக இசை வித்வான், செம்பை வைத்தியநாத பாகவதரின் கதையும் படமாகிறது. பாலக்காட்டில் உள்ள செம்பை என்ற கிராமத்தில் பிறந்தவர் இவர், கடந்த 1974 ஆம் ஆண்டு மறைந்தார். மூன்று வயதில் முறையாக, தன் தந்தையிடம் இசைக் கற்றவர் செம்பை.

பாடகர் யேசுதாஸ்

பாடகர் யேசுதாஸ்

கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக இசையுலகில் கோலோச்சியவர். பல்வேறு விருதுகளை பெற்றுள்ள இவரது பெயரில் இசை விழாக்கள் இப்போது நடந்து வருகின்றன. பிரபல பாடகர் யேசுதாஸ் இவரது சீடர். இவரது வாழ்க்கைக் கதை சினிமாவாக இருக்கிறது.

மோகன்லால்

மோகன்லால்

இதில் செம்பை வைத்தியநாத பாகவதராக நடிகர் மோகன்லால் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை இசை அமைப்பாளரும் இயக்குனருமான விஜித் நம்பியார் இயக்க இருக்கிறார். இவர் முந்திரி மோன்சன் என்ற படத்தை இயக்கியிருந்தார்.

டெக்னீஷியன்கள்

டெக்னீஷியன்கள்

செம்பை படத்துக்கான ஆரம்பக்கட்ட வேலைகள் நடந்துவருகின்றன. இந்தியாவில் உள்ள முன்னணி டெக்னீஷியன்கள் இதில் பணியாற்ற உள்ளனர். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகப் படக்குழுத் தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X