Rajinikanth: ரஜினிகாந்த் புகழைப் பரப்ப கடன் வாங்கிய தீவிர ரசிகர்.. கடன் தொல்லையால் தற்கொலை!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல், உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. எந்த ஒரு திரைக்கலைஞர் இருந்தாலும் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்த என் தலைவனுக்காக உயிரையே கொடுப்போம் என்பார்கள். ஆனால் இது உண்மையாக நடக்கும்போது நிலைமை முற்றிலும் வேறு ஒன்றாக மாறிவிடும் என்பதற்கு சான்றாக ஒரு துயரச் சம்பவம் செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூரில் நடைபெற்றுள்ளது.
சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகர் ரஜினிரகு. இவர் செங்கல் பட்டு மாவட்டத்தில் உள்ள அனகாபுத்தூர் பகுதியில் உள்ள ரஜினி ரசிகர் மன்றத் தலைவராக செயல்பட்டு வந்துள்ளார். சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகரான இவர், கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ரஜினியின் தீவிர ரசிகராக இருந்து வந்துள்ளார். ரஜினிகாந்த் மீது இருந்த தீவிரமான அன்பினால், தனது பெயரை ரஜினி ரகு என மாற்றி வைத்துக்கொண்டுள்ளார். இவர் தீவிர கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது அப்பகுதி மக்களை மட்டும் இல்லாமல், ரஜினி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ஆட்டோ ஓட்டுநரான இவர், ரஜினியின் புகைப்படங்களை தனது ஆட்டோ முதல், வீடு வரை அனைத்திலும் வைத்திருப்பார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போது ரசிகர்களைச் சந்தித்தாலும் சரி உடனே அவரைப் பார்க்க கிளம்பிச் சென்று, அவருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு வந்துவிடுவாராம்.

கடன்: இது எல்லாம் ஒரு புறம் இருக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் ரிலீஸ் ஆகும்போது எல்லாம், அன்னதானம் வழங்குவது, பட ரிலீஸை திருவிழாபோல் மாற்றுவது, ஊர் முழுக்க போஸ்டர்கள் ஒட்டுவது, கட் அவுட் வைப்பது என அனகாபுத்தூரையே திருவிழாபோல மாற்றிவிடுவார் என அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர். சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வரும்போது ஒவ்வொரு ஆண்டும் அதனை கோலாகளமாக கொண்டாடுவார்.

ரஜினிதான் காரணம்: இதற்காக ரஜினிரகு அதிகப்படியாக கடன் வாங்கிச் செய்துள்ளார். கடனின் அளவு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனதால், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் நேற்று அதாவது, ஜனவரி 8ஆம் தேதி காலை மதிய வேளையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது தற்கொலைக்கு காரணமே இவரது கடன் தொல்லைதான்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் புகழைப் பரப்பத்தான் கடன்கள் அதிகம் வாங்கினார். கடையிசில் அந்த கடன்கள் உயிரைப் பறித்துவிட்டது என அக்கம் பக்கத்தினர் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் இவரது தற்கொலைக்கான காரணங்களில் ஒன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எனவும் கூறுகின்றனர்.

தற்கொலை தீர்வல்ல.. : மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.



Click it and Unblock the Notifications











