சென்னையில் 17வது சர்வதேச திரைப்பட விழா - பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
Recommended Video
சென்னை: சென்னையில் டிசம்பர் மாதம் 12ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரையில் 17ஆவது சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. இவ்விழாவினை தமிழக அரசின் ஆதரவுடன் இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் (Indo Cine Appreciation Foundation-ICAF) நடத்தவிருக்கிறது. தமிழ் திரைப்பட போட்டிக்கான மொத்த பரிசு தொகை ரூ.6 லட்சமாகவும், இளம் சாதனையாளர் விருதுக்கு ரூ.1 லட்சமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா சென்னையில் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு நடைபெற்ற விழாவில், ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ், ஸ்வீடன், கொரியா உள்ளிட்ட 59 நாடுகளில் இருந்து 150 படங்கள் திரைடயிடப்பட்டன.

அதே போல், வருகிற டிசம்பர் மாதம் 12ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரையில் சென்னையில் நடைபெறவிருக்கும் இவ்விழாவினை தமிழக அரசின் மேலான பரிபூரண ஆதரவுடன் இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் (Indo Cine Appreciation Foundation-ICAF) நடத்தவிருக்கிறது.
இவ்விழா குறித்த போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, இந்திய திரைப்பட திறனாய்வு கழகத்தின் ICAF தலைவர் கண்ணன், துணை தலைவர் இராமகிருஷ்ணன், பொது செயலாளர் தங்கராஜ், பிலிம் சேம்பர் தலைவர் கட்ரகட்ட பிரசாத் மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

இவ்விழாவிற்கு தேர்வாகியுள்ள திரைப்படங்கள் சென்னையில் தேவி, தேவிபாலா, அண்ணா, காசினோவா, ரஷ்யன் கலாச்சார கழகம் மற்றும் தாகூர் அரங்கத்தில் திரையிடப்பட இருக்கிறது.
உலக சினிமா போட்டியில் பங்கு பெறும் தமிழ் திரைப்படங்கள், இந்திய பனோரமா, குறிப்பிட்ட இயக்குனர்களின் முந்தைய சாதனை திரைப்படங்கள், குறிப்பிட்ட நாடுகளின் சிறந்த திரைப்படங்கள் ஆகிய பிரிவுகளில் படங்கள் திரையிடப்படுகிறது.

தமிழ் திரைப்பட போட்டிக்கான மொத்த பரிசு தொகை ரூ.6 லட்சமாகவும், இளம் சாதனையாளர் விருதுக்கு ரூ.1 லட்சமாகவும் இருக்கும். இவ்விழாவில் திரைத்துறை பிரபலங்களான இயக்குனர் கம் நடிகர் பார்த்திபன், ரோகிணி, சித்ரா லட்சுமணன், இயக்குனர்கள் சங்க செயலாளர் தலைவர் ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











