»   »  எங்க ஏரியா உள்ள வராத.. பூஜையுடன் தொடங்கியது 'சென்னை 28-2'

எங்க ஏரியா உள்ள வராத.. பூஜையுடன் தொடங்கியது 'சென்னை 28-2'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை 28 படத்தின் 2 வது பாகத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இன்று பூஜையுடன் தொடங்கியிருக்கிறார்.

சென்னை 28 மூலம் கடந்த 2007 ம் ஆண்டில் இயக்குநராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு. மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.


ஜெய், சிவா, பிரேம்ஜி, நிதின் சத்யா, விஜய் வசந்த், அரவிந்த் ஆகாஷ் மற்றும் விஜயலட்சுமி நடிப்பில், கிரிக்கெட்டை அடிப்படையாக வைத்து வெங்கட் பிரபு இப்படத்தை எடுத்திருந்தார்.இதில் நடித்த ஜெய், சிவா, விஜய் வசந்த் ஆகியோர் தற்போது சோலோ ஹீரோக்களாக நடித்து வருகின்றனர்.


சென்னை 28, மங்காத்தா படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக உயர்ந்த வெங்கட் பிரபுவை பிரியாணி, மாஸ் போன்ற படங்கள் சரித்து விட்டன.


இதனால் சென்னை 28 படத்தின் 2வது பாகத்தை தற்போது கையிலெடுத்திருக்கிறார். இன்று நடைபெற்ற இப்படத்தின் பூஜையில் சிவா, நிதின் சத்யா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், வைபவ், விஜய் வசந்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை, குறுகிய காலத்தில் முடித்துவிட வெங்கட் பிரபு திட்டமிட்டிருக்கிறார்.


English summary
Venkat Prabhu's Chennai 28 Part 2 Pooja Held Today.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil