விடாது மழையிலும் சென்னை 28 டீம் சந்தித்து எடுத்துக்கொண்ட பிரெண்ட்ஷிஃப் போட்டோ!

சென்னை: இயக்குனர் வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் சென்னை 28.

கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு உருவான இந்த திரைப்படத்தில் மிர்ச்சி சிவா,பிரேம்ஜி ஜெய், ஆகாஷ், அஜய் என பலர் நடித்திருந்தனர்.

சென்னை-28 வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் வெளியாகி அந்த படம் வெற்றி பெற்ற சூழலில் இப்பொழுது மழையையும் பொறுட்படுத்தாமல் சென்னை-28 நண்பர்களை சந்தித்து எடுத்துக்கொண்ட பிரெண்ட்ஷிஃப் புகைப்படத்தை பிரேம்ஜி அமரன் பகிர்ந்துள்ளார்.

இயக்குனராக அறிமுகமானார்

இயக்குனராக அறிமுகமானார்

தனது ஒவ்வொரு படங்களிலும் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் துள்ளலுடன் படம் முழுவதும் பார்க்கும் அனைவரையும் உற்சாகப்படுத்தும் வகையில் கதைக்களத்தை அமைத்து தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பல முகங்களைக் கொண்டிருந்த வெங்கட்பிரபு கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான சென்னை-28 என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

மிகப்பெரிய உச்சத்தை தொட்டனர்

மிகப்பெரிய உச்சத்தை தொட்டனர்

முற்றிலும் புதுமுகங்கள் நடித்திருக்க பிரேம்ஜி அமரன், ஜெய், ஆகாஷ், நித்தின் சத்யா, அஜய், மிற்சி சிவா, விஜயலட்சுமி, விஜய் வசந்த் என பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். சென்னை-28 எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இதில் நடித்த நடிகர்கள் அனைவரும் மிகப்பெரிய உச்சத்தை தொட்டனர்.

சென்னை 28

சென்னை 28

சென்னை 28 வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாவது பாகமும் உருவாகி அந்த திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் வெங்கட்பிரபு தான் இயக்கும் திரைப்படங்களில் சென்னை 28 படத்தில் நடித்த நடிகர்களை குஷியாக பார்த்து தொடர்ந்து நடிக்க வைத்து வரும் நிலையில் எப்பொழுது செம குஷியாக பார்ட்டி என்ற படத்தை இயக்கியுள்ளார்.

Recommended Video

நீந்தி பொய் Dubbing குடுக்கணும் | Thamizhum Saraswathiyum Deepak
விடாது மழையிலும் பிரெண்ட்ஸ் மீட்

விடாது மழையிலும் பிரெண்ட்ஸ் மீட்

கடந்த ஒருவார காலமாகவே சென்னையில் மாலை கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறது. சென்னை சாலைகள் முழுவதும் மழைநீர் கரைபுரண்டோட மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர் . நடிகர் நடிகைகளும் படப்பிடிப்பு நடத்த முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் சென்னை 28 இப்படத்தில் நடித்த ப்ரேம்ஜி அமரன்,அஜய் ராஜ், நித்தின் சத்யா மற்றும் ஆகாஷ் ஆகியோர் விடாது மழையிலும் ஒன்றாக சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இப்பொழுது பிரேம்ஜி அமரன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை சென்னை 28 மூன்றாவது பாகம் உருவாகிறது என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X