twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உலகளவில் அங்கீகாரம் பெற்றது 'சென்னை 600028' திரைப்படம்!

    By Mayura Akilan
    |

    உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படங்களில் தமிழ் படமான சென்னை 600028, சிறந்த படமாக இங்கிலாந்து பத்திரிகை ஒன்று தேர்வு செய்துள்ளது.

    சென்னை-600028' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெங்கட்பிரபு. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகிய இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.எஸ்.பி.பி.சரண் மற்றும் சரவணா இப்படத்தை தயாரித்து இருந்தனர்.

    ஜெய் – சிவா

    ஜெய் – சிவா

    சென்னையில் உள்ள இரண்டு ஏரியா இளைஞர்களின் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் நட்பு, காதல், காமெடி என ரசிகர்களை கவர்ந்தது.

    வசூல் வெற்றி

    வசூல் வெற்றி

    பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளிவந்த இப்படம் வசூலில் பட்டையை கிளப்பியது. ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பு பெற்றது. வெங்கட் பிரபுவிற்கும் சிறந்த இயக்குனருக்கான அந்தஸ்தை ஏற்படுத்தி கொடுத்தது.

    உலக அங்கீகாரம்

    உலக அங்கீகாரம்

    7 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான இப்படத்திற்கு தற்போது உலக அளவிலும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இங்கிலாந்தில் வெளிவரும் முன்னணி நாளிதழ் ஒன்று வெளியிட்ட, உலகின் சிறந்த கிரிக்கெட் சார்ந்த படங்களில் வெங்கட் பிரபுவின் சென்னை-600028 படமும் இடம் பெற்றுள்ளது.

    மாஸ் இயக்குநர்

    மாஸ் இயக்குநர்

    வெங்கட்பிரபு தற்போது சூர்யாவை வைத்து ‘மாஸ்' படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The Famous England magazine announce, Chennai 600028 is the best cricket movie. The film is based on street cricket played in India, focussing on various themes as friendship
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X