GBU: குட் பேட் அக்லி FDFS சென்னையில் டிக்கெட்டே இல்லை.. வெளியூருக்கு படையெடுக்கும் ரசிகர்கள்..

சென்னை: மொத்த திரையுலகமும் தற்போது அஜித் குமாரின் குட் பேட் அக்லி படம் குறித்துதான் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். படம் சோலோ ரிலீஸ் என்றாலும் தமிழ்நாடு முழுவதும் சுமார் 1000 தியேட்டர்களில் படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. இப்படியான நிலையில் படத்திற்கு டிக்கெட் முன்பதிவு கடந்த வார இறுதியில் தொடங்கியது. இப்படி இருக்கும்போது, சென்னையில் பெரும்பாலான தியேட்டர்களில் முதல் நாள், முதல் காட்சிக்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்து விட்டன.

அஜித் குமார் , த்ரிஷா, சிம்ரன், பிரபு, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது, படக்குழு படம் வசூலில் மாஸ் ஹிட் அடிக்கும் என நம்பிக்கையோடு உள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகத்திற்குள் காலடி எடுத்து வைக்கிறது, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்.

Chennai Ajithkumar Fans Going To Another City To Watch Good Bad Ugly FDFS Show

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் சரியாக போகவில்லை. வசூல் ரீதியாக பெரிய தோல்வியைச் சந்தித்தது. ஆனால் விடாமுயற்சி படம் ஏற்படுத்திய தோல்வியும் மோசமான கமெண்ட்ஸும் குட் பேட் அக்லி படத்தை எந்த வகையிலும் பாதிக்கவில்லை எனக் கூறும் அளவிற்கு, ரசிகர்கள் இந்த படத்தை வரவேற்க தயாராகி வருகிறார்கள். படத்தின் டீசரை தியேட்டரில் படக்குழு வெளியிட்டது. தியேட்டரில் டீசரைப் பார்த்த ரசிகர்கள், அஜித் குமாரை மட்டும் இல்லாமல், இப்படி ஒரு படத்தை எடுத்துள்ள ஆதிக் ரவிச்சந்திரனையும் கொண்டாடினர்.

Chennai Ajithkumar Fans Going To Another City To Watch Good Bad Ugly FDFS Show

சிறப்புக் காட்சி: இப்படியான நிலையில் படத்தின் புக்கிங் கடந்த வார இறுதியில் இருந்து தொடங்கியது. முதலில் மதியம் 12 மணி காட்சிகளுக்குத்தான் டிக்கெட் புக்கிங் தொடங்கியது. இதன் மூலம் படத்திற்கு காலை 9 மணி காட்சிகள் உறுதி என்பது தெரிந்து விட்டது. ஆனால் ரசிகர்கள் காலை 9 மணி காட்சிகளுக்கு டிக்கெட் புக் செய்ய தயாராக இருந்தார்கள். மேலும் தீவிர ரசிகர்கள் மதிய காட்சிகளுக்கும் டிக்கெட் புக் செய்து வைத்துவிட்டார்கள்.

முன்பதிவு: இப்படியான நிலையில் காலை 9 மணி காட்சிகளுக்கு டிக்கெட் புக்கிங் நேற்று அதாவது ஏப்ரல் 8ஆம் தேதி தொடங்கியது. உடனே ரசிகர்கள் இணையத்திலும் பாக்ஸ் ஆபிஸிலும் புக் செய்தனர். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது. மல்டி ப்ளக்ஸ் தியேட்டர்களில் 9 மணிக்கு சில ஸ்கீர்ன்களிலும் அதன் பின்னர் 15 முதல் 30 நிமிட இடைவெளி விட்டு மற்ற ஸ்க்ரீன்களிலும் படம் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. பெரும்பான்மையான தியேட்டர்களில் முதல் நாளுக்கான 99 சதவீத டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன.

Chennai Ajithkumar Fans Going To Another City To Watch Good Bad Ugly FDFS Show

வெளியூர்: இப்படியான நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பகுதிகளும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் உள்ள பல நூறு தியேட்டர்களில், முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்கள் அனைத்தும் புக் ஆகிவிட்டது. முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் கிடைக்காத சென்னையில் உள்ள ரசிகர்கள் பலரும் சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள தியேட்டர்களில் காலை 9 மணிக் காட்சிக்கு டிக்கெட் இருக்கிறதா என்பதை இணையத்தில் பார்த்து தெரிந்து கொண்டு, இணையத்திலேயே புக் செய்துவிட்டார்கள். எனவே ரசிகர்கள் பலரும் வெளியூருக்கு படம் பார்க்க ஆயத்தமாகி வருகிறார்கள். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட திரையுலகினர், அஜித்திற்காக வெளிநாட்டில் இருந்து புறப்பட்டு வந்து மதுரை, திருநெல்வேலி, சென்னை, கோவை, திருச்சி போன்ற பகுதிகளில் படம் பார்க்கும் ரசிகர்கள் எல்லாம் உள்ளார்கள். அவர்களோடு ஒப்பிடும்போது, இவர்களும் சளைத்தவர்கள் இல்லை என பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X