For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சென்னைக்கு ஏக டிமான்ட்!

    By Shankar
    |

    சென்னை என்று வருவது போன்ற தலைப்புக்களுக்கு ஏக டிமான்ட் கோலிவுட்டில். இப்போதைக்கு சென்னை தலைப்பில் அரை டஜன் படங்களாவது தயாராகிக் கொண்டிருக்கின்றன.

    முன்பெல்லாம் ஏதாவது ஒரு தலைப்பில் வெளியான படம் வெற்றி பெற்றுவிட்டால், அதே சாயலில் படமெடுக்க கிளம்பிவிடுவார்கள். அந்த ஆண்டு முழுக்க அந்த ட்ரெண்ட் தொடரும்.

    சின்னத்தம்பி

    சின்னத்தம்பி

    சின்னத்தம்பியின் தாறுமாறான வெற்றிக்குப் பிறகு, ஏகப்பட்ட தம்பி தலைப்பு படங்கள் வந்து குவிந்தன. கிழக்குவாசல் வெற்றியைப் பார்த்து, கிழக்குக் கரை, கிழக்குப் பார்த்த வீடு, கிழக்கே வரும் பாட்டு, கிழக்குச் சூரியன், கிழக்கும் மேற்கும் என நிறைய படங்கள்...

    சென்னைக்கு வந்த கிராக்கி

    சென்னைக்கு வந்த கிராக்கி

    அந்த வகையில் இப்போது சென்னை என ஆரம்பிக்கும் அல்லது முடியும் தலைப்புகளை வைத்து வருகிறார்கள். ஏற்கெனவே சென்னை 28, சென்னைக் காதல் என்றெல்லாம் படங்கள் வந்தன. சமீபத்தில் சென்னையில் ஒரு நாள் வெளியாகி வெற்றிப் பெற்றது.

    வணக்கம் சென்னை

    வணக்கம் சென்னை

    இப்போது வணக்கம் சென்னை, சென்னையில் ஒரு மழைக்காலம், சென்னை, நானும் சென்னையும், நம்ம சென்னை ஆகிய பெயர்களை பதிவு செய்து வைத்துள்ளனர். இவற்றில் வணக்கம் சென்னை படத்தில் சிவா நடிக்கிறார். த்ரிஷா நாயகியாக நடிக்க சென்னையில் ஒரு மழைக்காலம் ஏற்கெனவே பாதியில் நிற்கிறது.

    வடக்கிலும் சென்னை

    வடக்கிலும் சென்னை

    இங்குதான் இப்படி என்றால், வடக்கிலும் சென்னைக்கு மவுசு குறையவில்லை. ஷாரூக்கானின் அடுத்த ரிலீஸ் சென்னை எக்ஸ்பிரஸ் என்பது நினைவிருக்கலாம்.

    சென்னையின் முந்தைய பெயரான மெட்ராஸ் என்ற பெயரிலும் படங்கள் வெளியாகின, உருவாகிக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    தென்னக சினிமாவின் தலைநகரமாச்சே...

    தென்னக சினிமாவின் தலைநகரமாச்சே...

    சினிமாக்காரர்களைப் பொறுத்தவரை சென்னையை அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் உயர்த்திப் பிடிக்கலாம். காரணம், தென்னக சினிமாவின் பிறப்பிடம், பாலிவுட் சினிமாக்களுக்கும் இடம் தந்த தாராளம், கனவுகளோடு வந்த பல திறமைசாலிகளை கைவிடாமல் தூக்கி நிறுத்தியது என பல வகையிலும் சென்னை பலருக்கு அன்னைதான்.

    Read more about: chennai titles சென்னை
    English summary
    Nowadays Chennai is becoming a part of Tamil cinema titles. The latest example being Shah Rukh Khan's Chennai Express.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X