twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மீண்டும் திறக்கப்படும் ‘கேசினோ’.. முதல் படமே நேர்கொண்ட பார்வை.. தெறிக்கவிடத் தயாராகும் தல ரசிகர்கள்!

    கேசினோ தியேட்டர் மறுசீரமைக்கப்பட்டு அடுத்த மாதம் திறக்கப்பட இருக்கிறது.

    |

    Recommended Video

    Agalaathey Lyrical Video : Nerkonda Paarvai | Ajith Kumar | Boney Kapoor

    சென்னை: சென்னையின் முக்கிய அடையாளமாக திகழும் கேசினோ தியேட்டர் மறுசீரமைக்கப்பட்டு, அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திற்காக திறக்கப்படுகிறது. சென்னை அண்ணாசாலைக்கு செல்லும் எவருக்கும் மிக முக்கிய அடயாளங்களில் ஒன்று கேசினா தியேட்டர்.

    ரிச்சி தெரு அருகில் புதுப்பேட்டை சாலையின் முனையில் ஓங்கி நிற்கும் அந்த கட்டடம் கடந்த 100 ஆண்டுகால சென்னை வரலாற்றின் சின்னம்.

    1941ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் திறக்கப்பட்டது கேசினோ திரையரங்கம். ஆரம்ப காலத்தில் ஆங்கிலப் படங்கள் மட்டுமே திரையிடப்பட்டன. இந்த திரையரங்கில் முதன்முதலில் திரையிடப்பட்ட படம் 'டர்ன்டு ஒவுட் நைஸ் அகேய்ன்' எனும் ஆங்கிலப்படம்.

    கேசினோ தியேட்டர்:

    கேசினோ தியேட்டர்:

    ஜிபி சாலையில் ஐஸ் தொழிற்சாலை நடத்தி வந்த ஜே.எச்.இராணி தான் இந்த தியேட்டரின் முதல் உரிமையாளர். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், 1950களின் மத்தியில் தான் கேசினோ தியேட்டரில் தமிழ் உள்ளிட்ட பிற மொழி படங்களும் திரையிடப்பட்டன. பிறகு 1971ம் ஆண்டில் இருந்து மீண்டும் ஆங்கிலப் படங்கள் மட்டுமே திரையிடப்பட்டன.

    சர்வதேச திரைப்பட விழா:

    சர்வதேச திரைப்பட விழா:

    நாட்கள் நகர நகர கேசினோ தியேட்டரில் தமிழ் தவிர்த்து, இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்கள் மட்டுமே திரையிடப்பட்டு வந்தன. நாளடைவில் அவ்வப்போது தமிழ் படங்களும் திரையிடப்பட்டன. 2000மாவது ஆண்டிற்கு பிறகு கேசினோ தியேட்டரில் திரைப்பட விழாக்கள் அதிகளவில் நடக்கத் தொடங்கின. சமீபத்தில் நடந்த சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் கூட கேசினோ தியேட்டரில் நிறைய படங்கள் திரையிடப்பட்டன.

    மறுசீரமைப்பு:

    மறுசீரமைப்பு:

    கடந்த 2012ம் ஆண்டு தான் இந்த தியேட்டர் முதன்முதலில் புனரமைக்கப்பட்டது. அப்போதும் கூட தியேட்டரின் உட்புறத்தில் சிதிலமடைந்த பகுதிகளை மட்டுமே சீரமைத்தார்கள். கடந்த மாதம் வரையில் இந்த தியேட்டரில் மரச்சேர்களே அடுக்காக அமைக்கப்பட்டிருந்தன. சத்யம் தியேட்டரின் லீஸ் காலம் முடிவடைந்த நிலையில், தற்போது இந்த தியேட்டரின் உரிமை தனிநபர் வசம் வந்துள்ளது. எனவே கேசினோ தியேட்டர் கடந்த ஒரு மாதகாலமாக மறுசீரமைப்பட்டு வருகிறது.

    குஷன் சேர்கள்:

    குஷன் சேர்கள்:

    இப்போதும் தியேட்டரின் வெளிப்புறத் தோற்றத்தை மாற்றப்போவதில்லையாம். உள்ளே தான் மாற்றங்கள் நடக்கின்றன. பார்வையாளர் வசதியாக அமர்ந்து படம் பார்க்கும் வகையில் மரச்சேர்கள் அனைத்தும் குஷன் சேர்களாக மாற்றப்படுகின்றன. படம் ஓடும் திரையும், ஒலிப்பான் கருவிகளும் நவீன வடிவம் பெறுகின்றன.

    நேர்கொண்ட பார்வை:

    நேர்கொண்ட பார்வை:

    ஆகஸ்ட் 2ம் வாரத்தில் தான் இந்த தியேட்டரை முழுமையாக புனரமைத்து திறக்க முடிவு செய்திருந்தனர். ஆனால் அஜித்தின் நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீசாவதால், அன்றைய தினமே தியேட்டரை திறக்க திட்டமிட்டுள்ளனர். அதற்காக இரவு, பகலாக வேலைகள் நடந்து வருகிறது.

    ரசிகர்கள் மகிழ்ச்சி:

    ரசிகர்கள் மகிழ்ச்சி:

    சென்னையின் வரலாற்று சின்னங்களில் ஒன்றான கேசினோ தியேட்டர் புத்துயிர் பெறுவது சினிமா ரசிகனுக்கு மகிழ்ச்சியே. இன்று நரைக்கூடி கழப்பருவமேய்திருக்கும் எத்தனையோ சினிமா ரசிகர்களுக்கு கேசினோ தியேட்டர் ஒரு 'சினிமா பாரடைஸ்' தான். அதிலும் தற்போது அஜித் படம் அதில் ரிலீசாவதால், தல ரசிகர்கள் சிறப்பான சம்பவம் செய்யக் காத்திருக்கின்றனர்.

    English summary
    The 78 years old Chennai Casino theatre is being renovated for Ajith's Nerkonda Parvai, which is releasing on August 8th.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X