twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹேப்பி பர்த்டே சென்னை.. சென்னையை பிரதிபலித்த படங்கள் ஓர் பார்வை! #MadrasDay

    |

    Recommended Video

    சென்னையில் பிடித்த இடம் இதுதான் : Happy Birthday Chennai : Celebrities Wishes

    சென்னை: இன்று சென்னை மாநகரின் 380வது பிறந்த நாள் கொண்டாடப்படும் நிலையில் சென்னையை பிரதிபலித்த சில படங்கள் குறித்த தகவல்களை காணலாம்.

    சென்னை முன்பு மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை மாநகர் தனக்கென பல சிறப்பான அடையாளங்களை கொண்டுள்ளது.

    அதில் முதன்மையானது மெரினா பீச். உலகின் மிக நீண்ட நான்காவது கடற்கரை என்ற பெருமையை பெற்றது மெரினா பீச். அதேபோல் சென்னை என்றதும் பல சினிமாக்களில் காட்டப்படுவது சிவப்பு நிறத்தில் கம்பீரமாய் வீற்றிருக்கும சென்ட்ரல் ரயில் நிலையம்.

    அறிமுக காட்சிகள்

    அறிமுக காட்சிகள்

    அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான மற்றொரு கட்டிடம் அண்ணாசாலையில் உள்ள எல்ஐசி கட்டிடம். சென்னையை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் இந்த இரண்டு கட்டடங்களையும் நிச்சயம் அறிமுக காட்சியிலேயே காண முடியும்.

    சில அடையாளங்கள்

    சில அடையாளங்கள்

    இதேபோல் சென்னை உயர்நீதி மன்றம், சென்னை கலங்கரை விளக்கம், ராஜாஜி மண்டபம், ஆகியவையும் சென்னையின் முக்கிய அடையாளங்களுல் ஒன்று. இந்த இடங்களையெல்லாம் சென்னையின் சில அடையாளங்களாக கூறலாம்.

    வாழ்க்கை தரம்

    வாழ்க்கை தரம்

    இந்நிலையில் சென்னையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட சில படங்கள் குறித்த தகவலை இங்கு காணலாம். மதராசப்பட்டினம், சென்னை 28, மெரினா, மெட்ராஸ், வடசென்னை உள்ளிட்ட படங்கள் சென்னையையும் சென்னை மக்களின் வாழ்க்கை தரத்தையும் வெளிப்படுத்திய படங்களாக கூறலாம்.

    மதராசப்பட்டினம்

    மதராசப்பட்டினம்

    இதில் மதராசப்பட்டினம் படம், இயக்குநர் ஏஎல் விஜய் இயக்கிய முதல் சரித்திரப் படமாகும். வெள்ளையர்கள் ஆட்சிக்காலத்தை பிரதிபலித்தது இந்தப்படம். அப்போதிருந்த சென்னையின் நிறமே வேறு என்பது அழகாக காட்டப்பட்டிருக்கும் மதராசப்பட்டினம் படத்தில்.

    காதல்

    காதல்

    இந்தப் படத்தில் ஆர்யா ஹீரோவாகாவும் எமி ஜாக்ஸன் ஹீரோயினாகவும் நடித்திருப்பார். ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் இந்தியர் ஒருவருக்கும், ஆங்கிலேயே பெண் ஒருவருக்கும் ஏற்படும் காதல் அழகாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும்.

    மதராசப்பட்டினத்தின் அழகு

    மதராசப்பட்டினத்தின் அழகு

    அதிலும் சென்னை மதராசப்பட்டினமாக இருந்ததன் அழகையும் படகு போக்குவரத்தையும், டிராம் போக்குவரத்தையும் அருமையாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். மதராசப்பட்டினம் எப்படி இருந்தது என்ற தலைமுறையின் கேள்விக்கு பதில் சொல்லும் படமாக இருந்தது மதராசப்பட்டினம்.

    சென்னை 28

    சென்னை 28

    சென்னை இளைஞர்களின் ஜாலி வாழ்க்கை, சின்ன சின்ன போட்டிகள், சண்டைகள் கிரிக்கெட்டி விளையாட்டின் மீதான காதல் ஆகியவற்றை பற்றி சொன்ன படம் சென்னை 28. இந்த படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு நகைச்சுவை மற்றும் காதலை கலந்து காட்டியிருப்பார்.

    மெட்ராஸ்

    மெட்ராஸ்

    அதனை தொடர்ந்து வடசென்னை பகுதி இளைஞர்கள் பயன்படுத்தப்படும் விதத்தையும், பூர்வகுடி மக்களை பற்றியும் சொன்ன படம் மெட்ராஸ். வியாசர்பாடி பகுதியில் உள்ள ஒரு சுவரை வைத்து அப்பகுதி இளைஞர்கள் அரசியலுக்கு பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதை இயக்குநர் பா.ராஞ்சித் ஜனரஞ்சகமாக சொல்லியிருப்பார் மெட்ராஸ் படத்தில்.

    வட சென்னை

    வட சென்னை

    அடுத்து வட சென்னை இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான படம் இது. எண்பதுகளின் பிற்பாதியில் தொடங்கி 2000ஆம் ஆண்டு வரை வந்து நிற்கும் படம். 80களில் சென்னை எப்படி இருந்தது எப்படி படிப்படியாக மாறியது என்பதை காட்சியாக்க பெரிதும் மெனக்கட்டிருப்பார்கள் என்பது படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரியும். குறிப்பாக சென்னை பழைய மத்திய சிறைச்சாலையின் செட்.

    மெரினா

    மெரினா

    அடுத்து இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த மெரினா. இந்தப்படம் மெரினாவில் சுண்டல் விற்கும் சிறுவர்கள் முதல் பிச்சையெடுக்கும் பெரியவர்கள் வரை கொண்டிருக்கும் பின்னணியையும், நடுத்தரவர்க்க இளைஞனின் காதலையும் தோலுரித்து காட்டியிருக்கும் மெரினா. இந்தப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் மெரினா பீச்சையும் அதனை சுற்றியுமே படமாக்கப்பட்டிருக்கும்.

    English summary
    Chennai celebrates its 380th birthday. Some information about Movies reflecting chennai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X