For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று சென்னை தினம் : தேடி வந்தவர்களுக்கு தாய் வீடு நம்ம சென்னை #Chennai381

|

சென்னை: தன்னை நம்பி வந்த மக்களை வாழவைக்கும் சக்தியாகவும், பல மொழிகள் பேசும் மக்களை நினைத்ததை சாதிக்க தூண்டும் உந்து சக்தியாகவும், தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் முதல் நகரமாகவும் விளங்கம் சென்னை இன்று 381ஆவது வயதில் அடியெடுத்து வைத்துள்ளது.

சென்னை..... இந்த பேரை கேட்டாலே ச்சும்மா அதிருதில்லங்க.

சென்னை இந்த வார்த்தையைக் கேட்டாலே நம்ம எல்லாருக்கும் ஞாபகம் வருவது கடற்கரை தாங்க. சுட்டெரிக்கும் வெயிலை கூட சுகமாக உணர்த்தும் இந்த கடற்கரை. சென்னையில் மெரினா பீச், பெசன்ட் நகர் பீச், கோல்டன் பீச் இருக்குங்க.. செயின்ட் ஜார்ஜ் கோட்டை, வள்ளுவர் கோட்டம், ரிப்பன் கட்டிடம் மற்றும் விவேகானந்தர் மாளிகை ஆகியவை சென்னையில் மிகவும் பிரபலமான நினைவுச் சின்னங்கள்.

Chennai Celebrating 381st Birthday

மக்கள் பல ஊர்களிலிருந்தும் கிராமங்களில் இருந்தும் தன் கனவுகளை சுமந்து வருவது சென்னைக்கு தாங்க. நம் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை பரபரப்புக்கு எந்தவித பஞ்சமும் இல்லாத ஒரு ஊர் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு பல மொழிகளைப் பேசும் மக்களும் இங்கு ஒன்று கூடி ஒன்றுபட்டு வாழ்வது பாக்குறதுக்கு அருமையான விஷயங்க. வேற்றுமையில் ஒற்றுமை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு நம்ம சென்னை தாங்க.

வந்தோரை வாழவைக்கும் தமிழகம் என்று சொன்னாலும் இதற்கு முதல் எடுத்துக்காட்டாக நம் சென்னை நகரம் தாங்க இருக்கு. தன்னையே நம்பி வந்த மக்களுக்கு இந்த ஊர் எப்பவுமே ஏமாற்றத்தை கொடுக்காதுங்க. ஏதாவது ஒரு வகையில தான் நினைத்ததை சாதிப்பதற்கு இந்த சென்னை கண்டிப்பாக உறுதுணையாக இருக்கும்.

ஹேப்பி பர்த்டே சென்னை.. சென்னையை பிரதிபலித்த படங்கள் ஓர் பார்வை! #MadrasDay

சென்னை மக்கள், இயல் இசை நாடகத்தில் மட்டும் இல்லைங்க விளையாட்டிலும் மிகுந்த ஆர்வத்தை காட்டுறாங்க. அதுக்கு உதாரணமாக நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மக்கள் தரும் பெரும் ஆதரவு தாங்க உதாரணம். அது மட்டுமா, இன்னிக்கு கிரிக்கெட் விளையாடுற மத்த நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு ரொம்ப பிடிச்ச ஊர் நம்ம சென்னை தாங்க.

Chennai Celebrating 381st Birthday

மத்த ஊர்ல கிரிக்கெட் மேட்ச் நடக்கும்போது நம்ம நாட்டு வீரர்கள் சிக்ஸ், ஃபோர் அடிச்சாதான் நம்மாளுங்க கை தட்டுவானுங்க. ஆனா சென்னைல தாங்க எதிரணி வீரர்கள் சிக்ஸ், ஃபோர் அடிச்சாலும் கை தட்டல் சும்மா வானத்தையே பொளக்கும்லே.

நம் தென்னிந்திய திரைப்படத்துறை சென்னையில் தாங்க இருக்கு. இங்கு பல்வேறு நடிகர்களும் நடிகைகளும் தன் இலக்கை அடைந்து தங்களுக்கென்று ஒரு இடத்தை மக்கள் மனசுல பிடிச்சிருக்காங்க. அதுக்கு முதல் உதாரணம் நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான்.

சென்னையில சினிமா மட்டும் இல்லைங்க பல ஐடி நிறுவனங்கள், கார் தொழிற்சாலைகள், மொபைல் ஃபோன் தயாரிப்பு நிறுவனங்கள் என அனைத்துமே தன் வளர்ச்சி பாதையை நோக்கி போயிட்டு இருக்கு.

அட அவ்வளவு ஏங்க. தமிழ் மக்களின் உரிமைக்குக் குரல் கொடுக்க நம்ம சென்னை மக்களை அடிச்சிக்கவே முடியாது. அந்த அளவுக்கு நம்ம பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அவங்க கொடுத்த ஆதரவை நீங்கள் பார்த்திருப்பீர்கள். உலக நாடுகளே ஆச்சரியப்பட்டு மிரண்டு போனாங்கன்னா சும்மாவாங்க.

Chennai Celebrating 381st Birthday

இங்கே வரலாற்று சிறப்புமிக்க கோயில்கள் இருக்குங்க. கபாலீஸ்வரர் கோயில், மருந்தீஸ்வரர் கோவில், அஷ்டலட்சுமி கோயில், சாந்தோம் சர்ச் இவை எல்லாமே நம்ம சென்னைக்கு மேலும் மெருகூட்டுதுங்க.

நமக்கு ஒரு கஷ்டம்னு வந்தா அடைக்கலம் தருவது நமது தாய் வீடு மட்டும்தாங்க. அந்த வகையில் தன்னைத் தேடி வந்த மக்களுக்கு ஒரு தாய் வீடாக தான் இந்த சென்னை இருக்குன்னு சொன்னா அது மிகையாகாது.

அதனால நம்மை எல்லாம் வாழவைக்கும் சென்னை இன்னைக்கு போல இன்னும் பல்லாயிரம் வருஷங்கள் நிலைச்சு நிக்கணும்னு, 381ஆவது பிறந்த நாள் கொண்டாடுற சென்னைய நாம வாழ்த்துறோம்.

English summary
Chennai, today at the age of 381, is the life force of the people who believed in it, the driving force behind the achievement of the thinking of the multilingual people and the first city to voice the rights of the Tamil people.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more