2009ல் கைதான விபச்சார வழக்கு... புவனேஸ்வரிக்கு ரூ. 3000 'ஃபைன்'!
சென்னை: விபச்சார வழக்கில் கடந்த 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்ட கவர்ச்சி நடிகை புவனேஸ்வரிக்கு இத்தனை காலம் நடந்த விசாரணையின் முடிவில் ரூ. 3000 அபராதம் விதித்து சென்னை சைதாப்பேட்டை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
புவனேஸ்வரி விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டபோது பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது நினைவிருக்கலாம்.
இந்த வழக்கு 2009ம் ஆண்டிலிருந்து சைதாப்பேட்டை கோர்ட்டில் நடந்து வந்தது. தற்போதுதான் அதில் தீர்ப்பு அளித்துள்ளனர்.

கவர்ச்சி நடிகை
பல்வேறு படங்களில் நடித்துள்ள நடிகை புவனேஸ்வரி. காமெடி, கவர்ச்சி, வில்லத்தனம் என பல கேரக்டர்களில் இவர் நடித்துள்ளார்.

பாய்ஸ் படத்தில்
ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் இவர் விபச்சாரப் பெண் வேடத்தில் சின்ன ரோலில் வந்திருந்தார்.

அடுக்குமாடிக் குடியிருப்பில் விபச்சாரம்
இவரை கடந்த 2009ம் ஆண்டு, அக்டோபர் 2ம் தேதி சாஸ்திரி நகர் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் வைத்துப் போலீஸார் கைது செய்தனர். அவர் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

சைதை கோர்ட்டில்
இதுதொடர்பாக சைதாப்பேட்டை பெருநகர 4வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு நடந்தது. 6 பேர் இந்த வழக்கில் சாட்சியமாக சேர்க்கப்பட்டனர்.

மாஜிஸ்திரேட் சரவணன்
இந்த வழக்கில் ஒரு வழியாக நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. மாஜிஸ்திரேட் சரவணன் அளித்த தீர்ப்பில், புவனேஸ்வரி விபச்சாரம் செய்தார் என்ற குற்றச்சாட்டு நி்ரூபணமாகியுள்ளது. எனவே அவருக்கு ரூ. 3000 அபராதம் விதிப்பதாக உத்தரவிட்டார்.

பல சர்ச்சைகள்
விபச்சார வழக்கில் சிக்கிய புவனேஸ்வரி அதற்குப் பிறகு தமிழில் அதிக படங்களில் நடிக்கவில்லை. மேலும் வேறு சில சர்ச்சைகளிலும் சிக்கினார். மாயாஜால் போன இடத்தில் இன்னொருவரின் கார் மீது இவரது காரை மோதி சண்டையில் இறங்கினார் என்று முன்பு பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











