For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இது மாதிரி விளையாட்டு போட்டிகளை பார்த்து நமக்கு நாமே உற்சாகப்படுத்திக்கலாம் - ஆர்யா

|
Chennai District Masters Athletic Meet 2019 | Arya | SJ Surya | Prabhu Soloman | Athulya Ravi

சென்னை: நமது உடல் ஒரு ஆலயம். அதை நல்லா பார்த்துக்கொண்டால் உள்ளே இருக்கிற ஆத்மா மகிழ்ச்சியடையும் என்று நடிகர் எஸ் ஜே கூறியுள்ளார். சென்னை மாஸ்டர்ஸ் அத்லெடிக் அசோஷியேஷன் நடத்தும் 17வது சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. 35 வயது முதல் 100 வயது வரையிலான பல்வேறு பிரிவுகளில் நடந்த ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல் போட்டிகளில் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளை அமைப்பின் தலைவர் செண்பகமூர்த்தி மற்றும் செயலாளர் ருக்மிணிதேவி ஆகியோர் தலைமை தாங்கி நடத்தினர்.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை கொடுத்து உற்சாகப்படுத்தினர் சிறப்பு விருந்தினர்கள். நடிகர் ஆர்யா, எஸ். ஜே. சூர்யா, இயக்குநர் பிரபு சாலமன், மகிழ் திருமேனி, நடிகை அதுல்யா ரசி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஊக்கப்படுத்தியதோடு, பதக்கம் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய எஸ் ஜே சூர்யா, 100 மீட்டரை 13 செகண்ட்ல ஓடிய செண்பக மூர்த்தி சார் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணம். நமது உடல் ஒரு ஆலயம். அதை நல்லா பார்த்துக்கொண்டால் உள்ளே இருக்கிற ஆத்மா மகிழ்ச்சியடையும் என்றார்.

ஆர்யா

ஆர்யா

ஒவ்வொரு வருடமும் நான் தவறாமல் இந்த தடகள போட்டிகளை காண வருவேன். 35 வயது முதல் 100 வயது வரையில், பல்வேறு பிரிவுகளில் ஓட்டப்பந்தயம், தடை தாண்டுதல் போட்டிகள் நடைபெறுகின்றன. இவர்களுடன் நான் போட்டி போட்டு ஓடினால் கண்டிப்பாக வெற்றி பெற முடியாது. அந்த அளவுக்கு உடல் வலிமையோடும், அர்ப்பணிப்போடும் கலந்து கொண்டு ஒடுகிறார்கள். அவர்கள் ஓடும் வேகத்தை பார்த்தால் நமக்கு நிறைய பயிற்சி தேவை என்பது புரிகிறது. செண்பகமூர்த்தி சாரை பார்த்தால் வருஷா வருஷம் வேகம் கூடிக்கொண்டேதான் போகிறது. இதை பார்க்க பெருமையாக இருக்கிறது.

உற்சாகம் பிறக்கிறது

உற்சாகம் பிறக்கிறது

இவர்களை பார்த்தாலே நமக்குள் ஒரு உத்வேகம் பிறக்கிறது. அதனாலேயே தவறாமல் ஒவ்வொரு ஆண்டும் கலந்து கொள்கிறேன். இவர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளிலும் கூட கலந்து கொள்கிறார்கள். நாம் தான் உடல் நிலையை பேணிக்காப்பதில் அக்கறை செலுத்துவதில்லை. அதற்கு ஏதாவது ஒரு காரணம் தேடுகிறோம். இவர்களை போல நாமும் உடலை பேணிக் காப்பதில் அக்கறை செலுத்த வேண்டும் என்றார் நடிகர் ஆர்யா.

விளையாட்டிற்கு அங்கீகாரம்

விளையாட்டிற்கு அங்கீகாரம்

பிரபு சாலமன் பேசும் போது, நம்மளால முடிஞ்சது எல்லோரையும் தட்டி கொடுக்கணும். அதைத்தான் செண்பகமூர்த்தி செய்கிறார். இந்த உற்சாகம்தான் அனைத்து வயதினரும் இதில் பங்கேற்பது ஆச்சரியமான விசயம் என்றார். கிரிக்கெட் தவிர்த்து பிற விளையாட்டுக்களுக்கும் ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்றார் இயக்குநர் மகிழ் திருமேனி.

புட்பால் பிடிக்கும்

புட்பால் பிடிக்கும்

இது அரசை நம்பியில்லை. தனியாராக இருந்து கொண்டு அரசு செய்யக்கூடிய காரியத்தை செய்திருக்கிறார் பாராட்டுக்கள் என்றார் மகிழ் திருமேனி.

எனக்கும் ஸ்போர்ட்ஸ் படம் எடுக்க ஆசை. நல்ல பிட்டான ஹீரோக்கள் இப்போது நிறைய இருக்கிறார்கள் ஸ்கிரிப்ட் எழுதிய பின்னர் அது பற்றி அறிவிப்பேன் என்று கூறினார் மகிழ் திருமேனி.

உற்சாகமும் எனர்ஜியும் வருது

உற்சாகமும் எனர்ஜியும் வருது

ஏசி ரூம்ல ஜிம்ல போனாதான் உடம்பை பாதுகாக்க முடியும் என்று இல்லை. வெயிலில் இவர்கள் ஓடியதைப் பார்த்து எனக்கு உற்சாகமாக இருக்கு என்றார் நடிகை அதுல்யா ரவி. இயக்குநர் கேஆர் பேசும் போது இந்த வயதுலயும் எல்லோரும் உற்சாகமாக ஓடுகிறார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.

35 வயதில் இருந்து 90 வயதுவரை ஓடி விளையாடுவது உற்சாகமான விசயம் என்றார்.

English summary
The Chennai district Masters Athletic Association has conducted the Chennai district Masters Athletic Meet recently at Jawaharlal Nehru Stadium Chennai. Film actors Arya, SJ Suriya, Athulya Ravi, Directors KR, Prabhu Solomon, Magizh Thirumeni and Ilavarasu participated in the event as chief guests and gave away the prizes to the winners. They honoured senior Asian achievers Nambiseshan and Mana Anandvel and also B Kanchana for her Universal Book of Records.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more