ரஜினி பெயரைச் சொல்லியே தமிழகத்தில் கல்லா கட்டிய சென்னை எக்ஸ்பிரஸ்
சென்னை: ஷாருக்கான் நடித்துள்ள சென்னை எக்ஸ்பிரஸ் படம் தமிழகத்தில் மட்டும் கடந்த 3 நாட்களில் ரூ.4.5 கோடி வசூல் செய்துள்ளது.
காமெடி படங்களுக்கு பெயர் போன ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே, சத்யராஜ், மனோரமா நடித்துள்ள படம் சென்னை எக்ஸ்பிரஸ்.
படம் விஜய்யின் தலைவா ரிலீஸாகவிருந்த அதே ஆகஸ்ட் 9ம் தேதி ரிலீஸானது.

தலைவா வரவில்லை
ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாகவிருந்த பவன் கல்யாணின் அத்தாரின்டிகி தாரேதி ஆந்திராவில் நடக்கும் போராட்டங்களால் தள்ளிப் போனது. இந்நிலையில் சில பல காரணங்களால் தலைவா தமிழகத்தில் மட்டும் ரிலீஸாகவில்லை.

சோலோவா வந்த ஷாருக்
பவன், விஜய் படங்கள் ரிலீஸாகாததால் தென்னிந்திய பாக்ஸ் ஆபீஸில் சென்னை எக்ஸ்பிரஸ் சோலாவாக பயணம் செய்து வசூலை அள்ளியுள்ளது.

தமிழகத்தில் ரூ.4.5 கோடி
தலைவா ரிலீஸாகாததால் தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் சென்னை எக்ஸ்பிரஸ் ரூ.4.5 கோடி வசூல் செய்துள்ளது. நீண்ட காலம் கழித்து தமிழகத்தில் ஒரு இந்தி படம் பாக்ஸ் ஆபீஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி பெயரைச் சொல்லியே
ஷாருக்கான் படத்தில் ஒரு பாடலின் பேக் கிரவுண்டில் ரஜினிகாந்தின் புகைப்படங்களைப் போட்டு, இடையிடையே தலைவா என்ற ஸ்லைடரைப் போட்டு, விளம்பர நிகழ்ச்சிகளில் தவறாது ரஜினி புகழ்பாடி படத்தை தமிழகத்தில் ஓட்டிவிட்டார். அதுவும் ரஜினிக்கு டெடிகேட் செய்யப்பட்ட லுங்கி டான்ஸை படத்தின் இறுதியில் வைத்து ரசிகர்களை இறுதி வரை தியேட்டரில் அமர வைத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











