ரூ. 156 கோடியைத் தாண்டி ரூ.200 கோடியை நோக்கி "சென்னை எக்ஸ்பிரஸ்"
மும்பை: ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படம் இதுவரை ரூ.156 கோடி வசூல் செய்துள்ளது.
ஷாருக்கான், தீபிகா படுகோனே, சத்யராஜ், மனோரமா ஆகியோரை வைத்து மசாலா படம் கொடுப்பதில் வல்லவரான ரோஹித் ஷெட்டி எடுத்த படம் சென்னை எக்ஸ்பிரஸ். ரம்ஜான் பண்டினை அன்று ரிலீஸ் ஆகி ஓடு, ஓடு என்று படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
படம் வெளியான வேகத்தில் ரூ.100 கோடி வசூலை அள்ளி புதிய சாதனை படைத்துள்ளது.

ரூ.156 கோடி
உலகின் பல்வேறு பகுதிகளில் ரிலீஸான சென்னை எக்ஸ்பிரஸ் இதுவரை ரூ.156 கோடி வசூல் செய்துள்ளது. இந்த படம் விரைவில் ரூ.200 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய சாதனை
சல்மான் கானின் ஏக் தா டைகர் படம் ரிலீஸான 9 நாட்களில் ரூ.140 கோடி வசூல் செய்தது தான் சாதனையாக இருந்தது. ஆனால் சென்னை எக்ஸ்பிரஸ் வெறும் 7 நாட்களிலேயே ரூ.150 கோடியைத் தாண்டியது.

கராச்சியிலும் ஹிட்
சென்னை எக்ஸ்பிரஸ் படம் பாகிஸ்தானிலும் ரிலீஸாகியுள்ளது. கராச்சியில் முதல் நாளில் இருந்து அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடுகிறது.

இங்கெல்லாம் கூட ரிலீஸ் ஆச்சா
சென்னை எக்ஸ்பிரஸ் நம் நாட்டில் சுமார் 3,500 ஸ்கிரீன்களிலும், வெளிநாடுகளில் 800 ஸ்கிரீன்களிலும் ரிலீஸ் ஆனது. இந்த படம் பெரு, மொராக்கோ, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலில் கூட ரிலீஸாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











