இந்தியாவில் ரூ.200 கோடி, உலக அளவில் ரூ.314 கோடியை வசூலித்த 'சென்னை எக்ஸ்பிரஸ்'
மும்பை: ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படம் இந்தியாவில் ரூ.200 கோடியையும், சர்வதேச அளவில் ரூ.314 கோடியையும் வசூலித்துள்ளது.
ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் கடந்த 9ம் தேதி ரிலீஸ் ஆனது. ரூ.75 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ரிலீஸான கையோடு ரூ.100 கோடி வசூலை அள்ளியது.
இந்நிலையில் இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ.200 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் உலக அளவில் ரூ.314 கோடி வசூல் செய்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு ரிலீஸான படங்களில் அதிகம் வசூல் செய்த படம் என்ற பெருமையை சென்னை எக்ஸ்பிரஸ் பெற்றுள்ளது. இந்தி படங்கள் அவ்வளவாக ஓடாத தமிழகத்திலும் சென்னை எக்ஸ்பிரஸ் நல்ல வசூலை அள்ளியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications
