நடிகை ரேவதிக்கு 22ம் தேதி விவாகரத்து

By Sudha

Revathi
சென்னை: நடிகை ரேவதி, அவரது கணவர் சுரேஷ் மேனன் ஆகியோரது விவாரத்து வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றம் 22ம் தேதி தீர்ப்பளிக்கவுள்ளது. அனறு இருவருக்கும் விவாகரத்து அளித்து தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஷா கேளுண்ணி என்ற இயற் பெயர் கொண்டவர் கேரளாவைச் சேர்ந்த ரேவதி. இவரது கணவர் பெயர் சுரேஷ் மேனன். இவர் தயாரிப்பாளராக, இயக்குநராக, கேமராமேனாக இருந்தவர். இருவரும் 1986ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். குழந்தைகள் இல்லை.

இருவரும் ஆரம்பத்தில் மனமொத்த தம்பதிகளாகவே இருந்தனர். பின்னர் சந்தேகப் புயல் வீசவே இருவரும் ஒரே வீட்டில் தனித் தனியாக வாழ ஆரம்பித்தனர். இருவரையும் சமசரப்படுத்த பல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் பலன் தரவில்லை.

இந்த நிலையில், பரஸ்பரமாக பிரிந்து செல்வதற்கு இரண்டு பேரும் முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் சென்னை குடும்பநல கோர்ட்டில் இரண்டு பேரும் சேர்ந்து 1.10.12 அன்று பரஸ்பர விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை முதலாவது கூடுதல் குடும்பநல கோர்ட் நீதிபதி ராஜா சொக்கலிங்கம் விசாரித்தார்.

இரண்டு பேரும் மார்ச் 31-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, அன்று ஆஜரானார்கள். பின்னர் ஏப்ரல் 6-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து இரண்டு பேரும் நீதிபதி முன்பு ஆஜரானார்கள். அவர்களிடம் நீதிபதி வாக்குமூலம் பெற்று அதை பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் 22-ந்தேதி தீர்ப்பளிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

அன்றைய தினம் இருவருக்கும் விவாகரத்து அளித்து நீதிபதி உத்தரவு பிறப்பிப்பார் என்று தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X