twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    களைகட்டப் போகும் சென்னை திரைப்படத் திருவிழா: 150 படங்கள், 8 நாட்கள்- டோன்ட் மிஸ் இட்

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் சர்வதேசத் திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த வருடத்திற்கான சர்வதேசத் திரைப்பட விழா டிசம்பர் 14-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    சென்னையில் இந்த வருடம் நடக்கும் 15-வது சர்வதேசத் திரைப்பட விழாவில் 150 படங்கள் திரையிடப்பட உள்ளன.

    படங்கள் திரையிடல்

    படங்கள் திரையிடல்

    டிசம்பர் 14-ம் தேதி மாலை ஆறு மணிக்கு கலைவாணர் அரங்கில் துவக்க விழா நடைபெறுகிறது. இதில் சினிமா பிரபலங்கள் உட்பட பலர் கலந்துகொள்கின்றனர். என்.எஃப்.டி.சி மற்றும் இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் இணைந்து வழங்கும் இந்த விழாவில் 150 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

    படங்கள் திரையிடல்

    படங்கள் திரையிடல்

    டிசம்பர் 14-ம் தேதி மாலை ஆறு மணிக்கு கலைவாணர் அரங்கில் துவக்க விழா நடைபெறுகிறது. இதில் சினிமா பிரபலங்கள் உட்பட பலர் கலந்துகொள்கின்றனர். என்.எஃப்.டி.சி மற்றும் இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் இணைந்து வழங்கும் இந்த விழாவில் 150 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

     உலக சினிமா

    உலக சினிமா

    இந்த திரைப்பட விழாவில் ஆஸ்திரேலியா, பிரெஞ்சு, ஸ்வீடன், ஐரோப்பா, கொரியா உள்ளிட்ட நாடுகளின் படங்கள் திரையிடப்படுகின்றன. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர் நடித்த இரண்டு படங்களும் திரையிடப்படுகின்றன.

     திரையிடப்படும் இடங்கள்

    திரையிடப்படும் இடங்கள்

    சென்னையில் உள்ள தேவி, தேவிபாலா, சத்யம், கேசினோ, அண்ணா ஆகிய தியேட்டர்களிலும் தாகூர் பிலிம் சென்டர், ரஷ்ய கலாசார மையம் ஆகிய தியேட்டர்களில் படங்கள் திரையிடப்படும்.

    English summary
    Chennai International Film Festival is held in Chennai every year on December. This year's film festival takes place from December 14 to 21. On the evening of 14th, the opening ceremony is held at the Kalaivaanar Hall at 6pm. NFDC and Indo Cine Appreciation Foundation will host 150 films at this festival.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X