அமீர்கானுக்கு விட்டீங்க சரி.. ஏழை ரசிகருக்கும் ஒரு படகு விட்டிருக்கலாமே அஜித்.. போஸ் வெங்கட் அதிரடி

சென்னை: Chennai Floods 2023 (சென்னை வெள்ளம் 2023) நடிகரும், இயக்குநருமான போஸ் வெங்கட் நடிகர் அஜித்குமாரை விமர்சித்து ட்வீட் செய்திருக்கிறார்.

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் ஆந்திராவில் கரையை கடந்துவிட்டது. ஆனால் அது சென்னைக்கு அருகில் நிலைகொண்டிருந்தபோது 24 மணிநேரத்துக்கும் மேலாக பேய் மழை பெய்ததால் சென்னை வெள்ளக்காடாக மாறிவிட்டது. ஒருபக்கம் தேங்கிய மழை நீர், மறுபக்கம் ஏரி உடைந்து வெளியேறிய நீர் என மக்கள் ரொம்பவே சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

Chennai Floods Actor and director Bose Venkat has tweeted criticizing actor Ajith Kumar

மீட்பு பணிகள் தீவிரம்: சென்னையின் முக்கியமான சாலைகளில் தேங்கியிருந்த மழை நீர் வடிந்துவிட்டாலும் இன்னும் பல பகுதிகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியிருக்கிறது. இதனால் அங்கிருக்கும் மக்கள் எல்லாம் உணவுக்கு, தண்ணீருக்கு என தவித்துவருகின்றனர். தீயணைப்பு வீரர்களும், தன்னார்வலர்களும் களத்தில் இறங்கி மீட்பு பணிகளில் தீவிரம் காட்டிவருகின்றனர்.

சிக்கிய அமீர் கான்: இதற்கிடையே நேற்று முன் தினம் காரப்பாக்கத்தில் விஷ்ணு விஷால் குடும்பமும், தனது தாயின் சிகிச்சைக்காக அங்கு இருந்த பாலிவுட் நடிகர் அமீர்கானும் வெள்ளத்தில் சிக்கினர். பிறகு அவர்கள் தீயணைப்பு வீரர்கள் துணையுடன் படகின் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். அந்தப் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டானது.

அஜித் உதவி: விஷ்ணு விஷால் மீட்கப்பட்ட சில மணி நேரத்தில் இன்னொரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் அதில் இருந்தது அஜித்குமார். அந்தப் புகைப்படத்தை பகிர்ந்து விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், ""எங்கள் நிலை பற்றி பொதுவான நண்பர் மூலம் அறிந்த எப்போதும் உதவக்கூடியவரான நடிகர் அஜித் எங்கள் வில்லா நண்பர்களுக்கும் போக்குவரத்து உதவிகளை செய்துகொடுத்தார். லவ் யூ அஜித் சார்" என குறிப்பிட்டிருந்தார்.

போஸ் வெங்கட் ட்வீட்: இந்நிலையில் இந்த விவகாரத்தில் நடிகரும், இயக்குநருமான போஸ் வெங்கட் அஜித்குமாரை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "வந்தோரை வாழ வைக்கும் தமிழ்நாடு.. இங்கிருக்கும் அத்தனை வட நாட்டவரையும் தமிழகம் காக்கும்.... (உங்களுக்குள் நல்ல இணைப்பு உண்டு).. ஆனால் உங்களை விரும்பும்.. டிக்கெட் எடுத்து உங்களை பார்க்கும் ஏழை குரல் உங்களுக்கு எப்போதும் கேட்க வாய்ப்பில்லை.,,( ஒரு போட் அவனுக்கும் விட்டிருக்கலாம்)" என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த ட்வீட் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X