அந்த 17 மிருகங்களின் ஆணுறுப்பை அறுத்தெறியுங்கள்: பார்த்திபன் கோபம்
Recommended Video

சென்னை: சென்னையில் 11 வயது சிறுமியை 7 மாதங்களாக பலாத்காரம் செய்தவர்களின் ஆணுறுப்பை அறுத்தெறியுங்கள் என்று நடிகர் பார்த்திபன் ட்வீட்டியுள்ளார்.
சென்னையில் காது கேளாத 11 வயது சிறுமியை அவர் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்த 17 பேர் 7 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்து அதிர்ச்சி அடையாதவர்களே இல்லை. இது குறித்து திரையுலகினர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
பார்த்திபன்
சிறுமியை சீரழித்தவர்களின் ஆணுறுப்பை அறுத்தெறியுங்கள் என்று பார்த்திபன் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கொந்தளிப்பு
12 வயது சிறுமிக்கு தாயான கஸ்தூரி சென்னை சம்பவம் குறித்து அறிந்து பேரதிர்ச்சியும், கோபமும் அடைந்துள்ளார். அந்த 17 பேரும் ஆட்கள் இல்லை முகங்கள் இருக்கும் ஆணுறுப்புகள் என்கிறார்.
விஷால்
பாலியல் பலாத்காரத்திற்கு மரண தண்டனை எனும் சட்டம் கொண்டு வர இன்னும் எத்தனை பேரை இழக்க வேண்டும். சென்னையில் 17 பேர் சேர்ந்து அப்பாவி சிறுமியை பலாத்காரம் செய்ததை அறிந்து அதிர்ச்சியும், கோபமும் அடைந்தேன் என்று நடிகர் விஷால் ட்வீட்டியுள்ளார்.
குஷ்பு
சிறுமியை சீரழித்த 17 பேரை தாக்கியது தவறு தான் என்றாலும் மக்களின் உணர்வு நியாயம் தான் என்கிறார் நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு.


Click it and Unblock the Notifications











