சும்மா விசிலு பறக்குதா.. உழைக்கும் தொழிலாளர்கள், வாசகர்களுடன் ‘ஒன் இந்தியா’ நடத்திய கூலி திருவிழா!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படம் அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்தே படத்தில் அவர் கூலியாக நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிவித்துவிட்டது. அதுவும் ஹார்பரில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக ரஜினிகாந்த் நடித்துள்ளார். திரையில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக நடித்துள்ள ரீல் கதாநாயகன் ரஜினியின் கூலி படத்தை பார்க்க நிஜத்தில் துறைமுகத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளிகளாக உள்ள 100 நிஜ கதாநாயகர்களையும், 'ஒன் இந்தியா' செய்தி நிறுவனத்தின் 50 லக்கி வாசகர்களையும், நமது "ஒன் இந்தியா " One India செய்தி நிறுவனம், பி.வி.ஆர் சத்யம் சினிமாஸ்க்கு அழைத்துச் சென்றுள்ளது.
இயல்பாகவே நமது வாழ்க்கைக்கு மிக நெருக்கமான படங்களைப் பார்க்கும் போது, அந்த படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் நமது வாழ்க்கையை பிரதிபலிப்பதாகவே தோன்றும். அது மனதிற்குள் ஒரு ஆறுதலை ஏற்படுத்தும், ஒரு திருப்தியக் கொடுக்கும், 'அட இது என்னோட கதைப்பா' என நண்பர்கள் மத்தியில் உரையாட வைக்கும். அப்படியான ஒரு திருப்தியை ஹார்பரில் மூட்டை தூக்கும் தொழிலாகளுக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதுதான், " சென்னை துறைமுகத்திலிருந்து வெள்ளித்திரை வரை" ( From Chennai Harbour to the Big Screen) என்ற நிகழ்வு.

இந்த நிகழ்வுக்காக 100 மூட்டை தூக்கும் தொழிலாளிகளை அவர்களுக்கு இடையில் போட்டி வைத்து தேர்வு செய்யப்பட்டார்கள். அதேபோல் வாசர்களுக்கு செய்திகளுக்கு இடையே கேட்கபப்ட்ட கேள்விகளுக்கு சரியான பதிலை விரைவில் கொடுத்தவர்கள் என்ற அடிப்படையில் தேர்வு செய்து திரைப்படத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
நிஜத்துக்கும் திரைக்கும் பாலம்: இந்த நிகழ்வு குறித்து One India செய்தி நிறுவனத்தின் CEO, திரு. ராவணன் பேசுகையில், " திரையில் சொல்லப்படும் கதைகளுக்கு மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையில் இருக்கும் மனிதர்களின் கதைகளுக்கும் சக்தி உண்டு என OneIndia நம்புகிறது. சென்னை துறைமுகத்தைச் சேர்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளர்களையும், எங்கள் வாசகர்களையும் 'கூலி' திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு நாங்கள் அழைத்து வந்ததன் மூலம், மறைக்கப்பட்ட நாயகர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வர எங்களின் முயற்சி. இது நிஜ வாழ்க்கையையும், நிஜமான போராட்டங்களையும், உண்மையான இந்தியாவையும் கவுரவப்படுத்தும் எங்களின் எண்ணமும் கூட" என்று கூறினார்.

ஆரவாரம்: ஏற்கனவே கூறியது போல, படத்தில் தங்களது வாழ்க்கையை பிரதிபலித்த ரஜினியை பார்த்ததும் திரையரங்கமே அதிரும் அளவுக்கு ஆரவாரம் செய்தனர். அதுவும் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் தூக்குங்கடா கொக்கியை என்ற வசனம் வந்த போது, இருக்கையில் இருந்து எழுந்து குதித்து ஆரவாரம் செய்தார்கள், மூட்டை தூக்கும் தொழிலாளர்கள். இவர்களின் ஆரவாரத்தில் தான் அரங்கம் அதிர்ந்தது. விசில் பறந்தது. வாசகர்களும் திருப்தியாக படத்தை பார்த்தார்கள். எமோஷனலான காட்சிகளில் தங்களது குடும்பத்தினரை நினைத்துக் கொண்டு அவர்கள் அமைதியாக இருந்ததையும் உணர முடிந்தது.
சமூக அக்கறை: இந்த நிகழ்வின் மூலம், One India நிறுவனம் பொழுதுபோக்கு, சமூக அக்கறை அது ஏற்படுத்தும் சமூகத் தாக்கத்தை இணைக்கும் அதன் கடமையை மீண்டும் செய்துள்ளது. ஒரு திரைப்பட ரிலீஸ் என்பது, ரீல் கதையை தாண்டி, ரத்தமும் சதையுமாக நம்முடன் இருப்பவர்களின் கதை என்பதை இந்த நிகழ்வு ஒருமுறை நிரூபித்துள்ளது.



Click it and Unblock the Notifications











