twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் விஜய்க்கு விதித்த ரூ.1.5 கோடி அபராதம்..இடைக்கால தடை..வருமான வரித்துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

    |

    சென்னை : கடந்த சில மாதங்களாகவே விஜய் மீது வழக்குகள் அடுத்தடுத்து விசாரணைக்கு வந்து கொண்டிருக்கின்றன. அதுவும் வரி விதிப்பு தொடர்பான வழக்குகளில் விஜய்யின் பெயர் தொடர்ந்து அடிபட்டு வருகிறது.

    கோலிவுட்டின் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய், 2015 ம் ஆண்டு சிம்புதேவன் இயக்கிய புலி படத்தில் நடித்திருந்தார். 130 கோடி வரை செலவு செய்து எடுக்கப்பட்ட இந்த படம் 101 கோடிகளை வசூலாக பெற்றது.

    தெலுங்கு மற்றும் இந்தியிலும் கூட இந்த படம் டப் செய்து வெளியிடப்பட்டது. இந்த படத்தின் சேட்டிலைட் உரிமம் 100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது.இந்த படத்திற்கு விஜய் 20 கோடி வரை சம்பளமாக பெற்றதாக சொல்லப்படுகிறது.

    அப்பா ஒரு தெய்வக்குழந்தை.. ரஜினிக்கு வாழ்த்துக்களை சொன்ன மகள்கள்! அப்பா ஒரு தெய்வக்குழந்தை.. ரஜினிக்கு வாழ்த்துக்களை சொன்ன மகள்கள்!

    விஜய் தாக்கல் செய்த வருமான மதிப்பு

    விஜய் தாக்கல் செய்த வருமான மதிப்பு

    கடந்த 2016-17ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.

    வருமானத்தை மறைத்தாரா விஜய்?

    வருமானத்தை மறைத்தாரா விஜய்?

    அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தது. அதன்படி, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்தது.

    விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம்

    விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம்

    வருமானத்தை மறைத்ததற்காக ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்து கடந்த ஜூன் 30ஆம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. தனக்கு அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    தாமதமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

    தாமதமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

    அபராதம் விதிப்பதாக இருந்திருந்தால், 2019ஆம் ஆண்டிலேயே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும் என்றும், காலதாமதமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    விஜய்க்கு எதிரான வழக்கில் கோர்ட் உத்தரவு

    விஜய்க்கு எதிரான வழக்கில் கோர்ட் உத்தரவு

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.மேலும், மனுவுக்கு வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி,விசாரணையை செப்டம்பர் 16க்கு தள்ளி வைத்துள்ளார்.

    Recommended Video

    Vinodhini | அவன் ஒரு ஆள் கிடையாது , வன்மம் உள்ள பெரிய டீம் அவங்க எல்லாரும் | *INTERVIEW
     அடுத்தடுத்த விசாரணைக்கு வரும் வழக்கு

    அடுத்தடுத்த விசாரணைக்கு வரும் வழக்கு

    2012 ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு கார் இறக்குமதிக்கு நுழைவு வரியை நீண்ட காலமாக நிலுவையில் வைத்ததாக விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது வணிக வரித்துறை. இதை எதிர்த்து விஜய் தொடர்ந்த வழக்கில் சமீபத்தில் தான் தீர்ப்பு வழங்கப்பட்டது.

    English summary
    Chenani High court issued stay order on the case against actor Vijay. IT filed case against Vijay which he hide his salary for getting Puli movie. IT asked to pay penality to Vijay. But Vijay opposed the order and approach Chennai High court.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X