twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அன்புச்செழியன் மீதான புகாரை விசாரிக்க போலீசுக்கு இடைக்கால தடை: சென்னை ஹைகோர்ட்

    By Siva
    |

    Recommended Video

    அன்பு செழியன் வழக்கை விசாரிக்க தடை விதித்த சென்னை உயர் நீதி மன்றம்- வீடியோ

    சென்னை: பைனான்சியர் அன்புச்செழியன் மீதான புகார் குறித்து விசாரணை நடத்த போலீசாருக்கு இடைக்கால தடை விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

    நடிகரும், இயக்குனருமான சசிகுமாரின் உறவினரான தயாரிப்பாளர் அசோக் குமார் கடந்த மாதம் 21ம் தேதி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    Chennai HC order gives relief to Anbu Chezhiyan

    தனது சாவுக்கு காரணம் பைனான்சியர் அன்புச்செழியன் என்று அசோக் குமார் கடிதம் எழுதி வைத்திருந்தார். இதையடுத்து அசோக் குமாரை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் அன்புச்செழியன் மீது வழக்கப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அன்புச்செழியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரின் மனுவை விசாரித்த நீதிமன்றம் போலீசார் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

    முன்னதாக இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவின்கீழ் இயங்கும் கந்துவட்டி தடுப்புப்பிரிவுக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Chennai high court has ordered police not to go ahead with the investigation in Anbu Chezhiyan case. Chennai police filed a case against Anbu after producer Ashok Kumar ended his life.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X