இளையராஜா பாடல் விவகாரம்... உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு !

சென்னை : இளையராஜா பாடலைப் பயன்படுத்த இரண்டு முன்னணி நிறுவனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

இளையராஜா வழக்கு தொடர்ந்து பல ஆண்டுகள் ஆன நிலையில், அவரது இசையை அந்த நிறுவனம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தது.

இசைஞானியின் இசையை பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்திருப்பது இளையராஜாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

இசைஞானி இளையராஜா

இசைஞானி இளையராஜா

இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல்களுக்கு ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை பெறாமல், தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ நிறுவனம் மற்றும் அகி மியூசிக் உள்ளிட்ட இசை நிறுவனங்கள் மீது பிரபல இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

உரிமை உள்ளது

உரிமை உள்ளது

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அனிதா சுமத், இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த எக்கோ நிறுவனம் உள்ளிட்ட இசை நிறுவனத்துக்கு உரிமை உள்ளது என்று தீர்ப்பளித்திருந்தார். தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து இளையராஜா மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மேல்முறையீடு வழக்கு நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி தமிழ்ச்செல்வி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது .

வழக்கறிஞர் வாதம்

வழக்கறிஞர் வாதம்

இளையராஜா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒப்பந்தம் காலாவதியான பிறகும் தனது பாடல்களை பயன்படுத்தி வருவதாகவும் இதற்கு உரிய காப்புரிமை பெறவில்லை என்றும் வாதிட்டார். தனி நீதிபதி சட்டத்தின் பிரிவு 14ல் பதிப்புரிமை என்பதன் பொருளைப் பரிசீலிக்க தவறிவிட்டார் என்று வாதிட்டார்.

Recommended Video

Exclusive | Ilayaraja-Gangai Amaran திடீர் சந்திப்பு ஏன்? | Tamil Filmibeat
தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை

தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை

இசைப்பணியைப் பொறுத்தவரை, பதிப்புரிமை என்பது எந்தவொரு ஊடகத்திலும் மின்னணு வழிகளில் சேமித்து வைப்பது உட்பட எந்தவொரு பொருளின் வடிவத்திலும் படைப்பை மீண்டும் உருவாக்குவதற்கு பிரத்தியேக உரிமையாகும் என்று குறிப்பிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதித்து இது குறித்து சம்பந்தப்பட்ட இசை நிறுவனம் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 21ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். இசைஞானியின் இசையை பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்திருப்பது இளையராஜாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X