Rudhran Movie Ban - ருத்ரன் படத்துக்கு தடை.. ஏன் தெரியுமா?.. ரசிகர்கள் அதிர்ச்சி
சென்னை: Rudhran Movie Ban (ருத்ரன் படத்துக்கு தடை) ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும் ருத்ரன் படத்தை ஏப்ரல் 24ஆம் தேதிவரை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
க்ரூப் டான்ஸராக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கி பின்னர் நடன அமைப்பாளர், இயக்குநர், நடிகர் என பல அவதாரங்களை எடுத்தவர் ராகவா லாரன்ஸ். சினிமாவோடு மட்டும் நின்றுகொள்ளாமல் தன்னால் முடிந்த உதவிகளை பலருக்கும் செய்துவருபவர் லாரன்ஸ். இதனால் பலரிடம் பாராட்டையும் பெற்றவர் லாரன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் லாரன்ஸ்: அற்புதம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான லாரன்ஸ் முனி படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானார். முதல் படம் சுமாரான வரவேற்பைப் பெற்றாலும் அடுத்ததாக அவர் இயக்கிய காஞ்சனா, காஞ்சனா 2 ஆகிய படங்கள் மெகா ஹிட்டாகின. எனவே முன்னணி இயக்குநர் என்ற அந்தஸ்தை பெற்றார். காஞ்சனா படமானது ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. அங்கும் லாரன்ஸே படத்தை இயக்கினார்.
ருத்ரன்: லாரன்ஸ் இப்போது ருத்ரன் படத்தில் நடித்திருக்கிறார். பொல்லாதாவன், ஆடுகளம், ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் கதிரேசன் இயக்குநராக இப்படம் மூலம் அறிமுகமாகியிருக்கிறார். ப்ரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
ருத்ரன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா: இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் பிரமாண்டமாக நடந்தது. இதில் லாரன்ஸ் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். படத்தின் ட்ரெய்லருக்கு ரசிகர்களும் தங்களது ஆதரவை கொடுத்திருக்கின்றனர். மேலும் பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. குறிப்பாக பாடாத பாட்டெல்லாம் பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டிருக்கும் விதம் பலரையும் ஈர்த்துள்ளது.

டப்பிங் உரிமை: இந்நிலையில் படம் தமிழ் புத்தாண்டையொட்டி ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. இதற்கிடையே, ருத்ரன் படத்தின் ஹிந்தி மற்றும் பிற மொழி டப்பிங் உரிமையை ரெவன்சா குளோபல் வென்சர்ஸ் எனும் நிறுவனம் பெற்றிருந்தது. இதற்காக 12 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டிருந்த நிலையில் முதல்கட்டமாக ரெவன்ஸா நிறுவனம் 10 கோடி ரூபாயை தயாரிப்பு நிறுவனத்திடம் செலுத்தியதாக கூறப்படுகிறது.
ருத்ரனுக்கு தடை : ஆனால் கூடுதலாக 4 கோடியே 50 லட்சம் ரூபாய் கேட்டு 'ருத்ரன்' பட தயாரிப்பு தரப்பு ரெவன்ஸா நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை திடீரென ரத்து செய்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ரெவன்ஸா நிறுவனம், திட்டமிட்டபடி படம் வெளியானால் தங்களுக்கு 10 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். எனவே படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என சென்ன உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் 'ருத்ரன்' படத்தை ஏப்ரல் 24ஆம் தேதிவரை வெளியிட தடை விதித்துள்ளது.


Click it and Unblock the Notifications











