twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரீல் ஹீரோவாய் இருக்காதீங்க.. சொகுசு காருக்கு வரிவிலக்கு கோரிய விஜய்.. ஹைகோர்ட் குட்டு!

    |

    சென்னை: வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த காருக்கு வரிவிலக்கு கோரிய நடிகர் விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் ரீல் ஹீரோவாக இருக்காதீர்கள் என்றும் கண்டித்துள்ளது.

    Recommended Video

    Real Heroவா இருங்க! Actor Vijayகு Chennai High Court அபராதம்

    தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். தமிழ் மொழி மட்டுமின்றி மற்ற மொழி பேசும் ரசிகர்கள் என கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார்.

    தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். இந்நிலையில் தான் வாங்கிய வெளிநாட்டு காருக்கு வரி விலக்கு கோரிய நடிகர் விஜய்யின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    விஜய்யின் பிகில் பட வியாபாரத்தை ஓரங்கட்டியதா அஜித்தின் வலிமை ? விஜய்யின் பிகில் பட வியாபாரத்தை ஓரங்கட்டியதா அஜித்தின் வலிமை ?

    ரோல்ஸ் ராய்ஸ்

    ரோல்ஸ் ராய்ஸ்

    அதாவது நடிகர் விஜய், கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து சொகுசு காரான ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்திருந்தார். இந்த காருக்கு நுழைவு வரி செலுத்தாததால் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் அலுவலகத்தில் பதிவு செய்யவில்லை.

    உயர் நீதிமன்றத்தில் மனு

    உயர் நீதிமன்றத்தில் மனு

    இதையடுத்து ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்த வணிக வரி துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்தும் வரி வசூலிக்க தடை விதிக்கக் கோரியும் நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    தொழிலை குறிப்பிடவில்லை

    தொழிலை குறிப்பிடவில்லை

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ் எம் சுப்ரமணியம், மனுதாரர் தான் எந்த தொழில் செய்கிறோம் என்பதை மனுவில் குறிப்பிடவில்லை என்றும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் கேட்டபோது தான் மனுதாரர், நடிகர் என்று குறிப்பிட்டார்..

    நன்கொடை இல்லை

    நன்கொடை இல்லை

    புகழ் பெற்ற சினிமா நடிகர்கள் முறையாக, உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், வரி வருமானம் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு எனவும் குறிப்பிட்ட நீதிபதி,வரி என்பது கட்டாயமாக வழங்க வேண்டிய பங்களிப்பு தானே தவிர, தானாக வழங்க கூடிய நன்கொடை இல்லை எனவும் காட்டமாக தெரிவித்தார்.

    ரீல் ஹீரோவாக இருக்காதீர்கள்

    ரீல் ஹீரோவாக இருக்காதீர்கள்

    மேலும் வரி செலுத்தாமல் இருப்பதும் தேசத் துரோகம் தான் என்ற நீதிபதி, சமூக நீதிக்காக பாடுபடுவதாக பிரதிபலிக்கும் ஹீரோக்கள் வரிவிலக்கு கோருவதை ஏற்க முடியாது என்றார். நடிகர்கள் உண்மையான ஹீரோவாக இருங்கள்
    ரீல் ஹீரோவாக இருக்கக்கூடாது என்றும் கண்டித்தார்.

    விஜய்க்கு அபராதம்

    விஜய்க்கு அபராதம்

    மேலும் இறக்குமதி செய்யப்பட்ட காருக்கான வரியை 2 வாரங்களில் செலுத்த வேண்டும் என நடிகர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். அதோடு நடிகர் விஜய்க்கு ரூபாய் 1 லட்சம் அபராதம் விதித்த நீதிபதி, அதனை முதல்வர் கொரோனா நிதிக்கு வழங்க வேண்டும் என்றும் ஆணையிட்டார்.

    English summary
    Chennai high court has dismissed Vijay's petition against import duty for his car. High court also imposed rupees one lakh penalty for Vijay.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X