twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குயின் வெப் சீரிஸ்க்கு தடைக்கோரிய வழக்கு.. தள்ளுபடி செய்தது சென்னை ஹைகோர்ட்!

    |

    Recommended Video

    QUEEN WEB SERIES PRESSMEET | RAMYAKRISHNAN | GAUTHAM VASUDEV MENON | FILMIBEAT TAMIL

    சென்னை: உள்ளாட்சி தேர்தல் நடைமுறைகள் அமலில் உள்ளபோது மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட குயின் இணையதள தொடரை தடை கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    இயக்குநர் கெளதம் மேனனும், 'கிடாரி' இயக்குநர் பிரஷாந்த் முருகேசனும் 'குயின்' என்ற பெயரில் ஜெ-வின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக இயக்கியுள்ளனர்.

    Chennai high court dismissed the petition against queen web series

    குயின் வெப் சிரீஸில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் 'சக்தி சேஷாத்ரியாக' ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். ஜெயலலிதாவின் பள்ளிப் பருவத்திலிருந்து தொடங்கும் இந்த வெப் சிரீஸில் சிறு வயதில், அனிகா சுரேந்திரனும், இளவயதில் அஞ்சனா ஜெயபிரகாஷும் நடித்துள்ளனர்.

    இந்த குயின் வெப் சீரிஸ் கடந்த 14ஆம் தேதி ரிலீஸானது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு இருந்தபோது வெளியான குயின் இணைய தொடருக்கு தடை விதிக்கக்கோரி சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த பி.ஏ.ஜோசப் என்பவர் பொது நல மனு தாக்கல் செய்தார்.

    உள்ளாட்சி தேர்தல் முடியும்வரை குயினுக்கு தடை விதிக்க கோரிய மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா ஆகியோர் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.

    இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் மனு விசாரணைக்கு உகந்ததல்ல என கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    English summary
    Chennai high court has dismissed the petition against queen web series.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X