நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு.. தள்ளுபடி செய்த சென்னை ஹைகோர்ட்!
சென்னை: சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தி.நகர், அபிபுல்லா சாலை மற்றும் பிரகாசம் தெருவை இணைக்கும் 33 அடி அகல சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்கத்திற்கு 26 கோடி ரூபாய் செலவில் கட்டிடம் கட்டுவதால் அந்த முடிவை ரத்து செய்யக்கோரி தியாகராய நகர் வித்யோதயா காலனியை சேர்ந்த ஸ்ரீரங்கன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை கடந்த 2017ம் ஆண்டு விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வழக்கறிஞர் ஆணையரை நியமித்தது. மேலும் கட்டிடப்பணிகளை மேற்கொள்ளவும் தடைவிதித்தது.
பின்னர் அவர் தாக்கல் செய்த அறிக்கையில், சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டடம் கட்டப்படவில்லை என தெரிவித்ததால், கட்டிடம் கட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் பார்த்திபன் சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்கம் கட்டிடம் கட்டப்பட வில்லை என உறுதியானதால் இதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.


Click it and Unblock the Notifications











