கேள்வி கேட்க மகன் வருவான்.. அதிர்ச்சியில் ரங்கராஜ்.. ஜாய் கிரிசில்டாவிற்கு ஆதரவாக வந்த தீர்ப்பு!
சென்னை: ரங்கராஜ் விவகாரத்தில் தங்கள் நிறுவனத்தை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிட, ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிசில்டா காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜூடன் இருக்கும் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இதை தடுக்கக்கோரி,சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தன்னைப் பற்றி அவதூறு கருத்துகள் தெரிவிப்பதைத் தடுக்கவும், அவதூறாக வெளியிடப்பட்ட வீடியோக்களை நீக்க உத்தரவிடவும் கோரி இருந்தார், அதேபோல், மாதம்பட்டி ரங்கராஜ் பங்குதாரராக இருக்கும் "மாதம்பட்டி தங்கவேலு பிரைவேட் லிமிடெட்" நிறுவனத்தை தொடர்புபடுத்தி ஜாய் கிரிஸில்டா பேசியதால், அந்நிறுவனத்திற்கு 15 நாட்களில் ரூ.12.5 கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறி மற்றொரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

உயர்நீதிமன்றத்தில் விசாரணை: இந்த வழக்கு செப்டம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வாதிட்ட கிரிசில்டா தரப்பு வழக்கறிஞர், மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் பற்றியோ, நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கை குறித்தோ எதையும் பதிவிடவில்லை. 11 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறும் நிலையில், கேட்டரிங் ஆர்டர் எப்போது புக் செய்தனர், எப்போது ரத்து செய்யப்பட்டது, எவ்வளவு அட்வான்ஸ் பெறப்பட்டது, எவ்வளவு அட்வான்ஸ் திரும்ப கொடுக்கப்பட்டது என எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை. கேட்டரிங் ஆர்டர்கள் ரத்தானதற்கும், ஜாய் கிரிசில்டாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என வாதிட்டார்.
மனு தள்ளுபடி: இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தடை கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்நிலையில், இன்று தீர்பளித்த நீதிபதி செந்தில் குமார், ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் மாதம்பட்டி ரங்கராஜுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தனக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால் மகிழ்ச்சியில் இருக்கும் ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உண்மை ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரும், மாதம்பட்டி ரங்கராஜ் ஓடவும் முடியாது ஒளியவும் முடியது, உன்னை கேள்வி கேட்க உன் வீரமிக்க மகன் எழுந்து வருவான் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











