டியூட் படத்துமேலே தனியாக கேஸ் போடுங்க ராஜா.. இளையராஜாவுக்கு உயர்நீதிமன்றம் கொடுத்த அட்வைஸ்!

சென்னை: இசைஞானி இளையராஜா தற்போதுதான் செம பிஸியாக இருக்கிறார், அவர் வயது சினிமா பிரபலங்கள் எல்லாம் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இவர் படங்களுக்கு இசையமைப்பது, பாடல்கள் பாடுவது, இது மட்டும் இல்லாமல் சிம்பொனி அமைப்பது என ரசிகர்கள் தொடங்கி அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்து வருகிறார். இப்படி இருக்கையில் டியூட் படத்தில் அவரது பாடல்களை அவரிடம் அனுமதி பெறாமல், பயன்படுத்தியதற்காக அவர் தனியாக வழக்கு தொடரலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போது வெளியாகும் பல படங்களில் பழைய பாடல்களைப் பயன்படுத்தும் வழக்கம் ஒன்று இருந்து கொண்டே உள்ளது. அது ஒரு டிரெண்ட்டாக மாறிவிட்டது. இப்படி இருக்கையில் அதில் பல இசையமைப்பாளர்களிடம் சில தயாரிப்பு நிறுவனங்கள் அனுமதி வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் சிலரோ அப்படிச் செய்வது இல்லை. அல்லது தவறான இடத்தில் அனுமதி வாங்கி விடுகிறார்கள். இப்படி இருக்கையில், அஜித்தின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான படமான குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் மூன்று பாடல்கள் அவரது அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டதால், படக்குழுவினர் மீது வழக்கு தொடுத்தார்.

Chennai High Court Gives Suggestions To Ilayaraja To File Case Against Dude Movie

இந்நிலையில் வழக்கு முடியும் வரை குட் பேட் அக்லி படத்தின் ஓடிடி ஸ்ட்ரீமிங்கில் இளையராஜா பாடல்களை பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இப்படி இருக்கையில், இந்த தடையை தளர்த்த வேண்டும் என்று மைத்ரி மூவிஸ் தரப்பில் வாதாட பட்டு வருகிறது.மேலும் பாடலின் ஒலிபரப்பு காப்புரிமை சோனி மியூசிக்கிடம் உள்ளதால் சோனி மியூசிக் நிறுவனத்திடம் நாங்கள் முறையான அனுமதி பெற்று விட்டோம் என்று தெரிவித்து வருகிறார்கள்.

இரண்டு பாடல்கள்: இப்படி இருக்கும்போது இந்த வழக்கில் தீர்ப்பு விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கும்போது, தீபாவளிக்கு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ள படமான, டியூட் படத்திலும் இளையராஜாவின் இரண்டு பாடல்கள் அவரிடம் முறையான அனுமதி பெறாமல், பயன்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai High Court Gives Suggestions To Ilayaraja To File Case Against Dude Movie

டியூட் படத்தின் மீது வழக்கு: இதனால் சென்னை உயர்நீதிமன்றமோ, " டியூட் படத்தில் அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்ட பாடல்கள் தொடர்பாக இளையராஜா தரப்பில் தனி வழக்கு தொடர்ந்தால், அது விசாரிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சோனி நிறுவனத்திற்கு எதிராக இளையராஜா தொடர்ந்த காப்புரிமை தொடர்பான வழக்கு விசாரணையின்போது சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சோனி நிறுவனம்: இது மட்டும் இல்லாமல், இந்த வழக்கு தொடர்பாக வழக்கு விசாரணைக்காக, இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தி சோனி நிறுவனம் ஈட்டிய வருமானக் கணக்குகளையும் சோனி நிறுவனம் சமர்ப்பித்துள்ளது. இந்த வழக்கில் இளையராஜாவுக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு வரும் என்று சிலரும், தீர்ப்பு வராது என்று சிலரும் தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் டியூட் படக்குழு மீது தனி வழக்கு
தொடரச் சொல்லி நீதிமன்றமே தெரிவித்துள்ளதால், தற்போது டியூட் படக்குழுவினரும் ஷாக்கில் இருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X