ஹைகோர்ட் அதிரடி.. பிகில் படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்! #Bigil

Recommended Video

Bigil Producer Archana Kalpathi answered to Vijay Fans in Twitter live

சென்னை: பிகில் படத்தின் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர சென்னை ஹைகோர்ட் உதவி இயக்குநர் செல்வாவுக்கு அனுமதி அளித்துள்ளது.

நடிகர் விஜய், இயக்குநர் அட்லீ கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் அட்லீ. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.

பிகில் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இப்படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் 2 நாள் முன்னதாக வரும் வெள்ளிக்கிழமை 25ஆம் தேதியே படம் ரிலீஸாகும் என தயாரிப்பு தரப்பு தெரிவித்தது.

வருமா வராதா?

வருமா வராதா?

இதனால் பிகில் படத்தை காண ரசிகர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகுமா ஆகாதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வழக்கு

வழக்கு

காரணம், படத்தின் ட்ரெயிலர் கடந்த வாரம் வெளியானது. ட்ரெயிலர் வெளியான நாள் முதலே கதை தன்னுடையது ஆளாளுக்கு சொந்தம் கொண்டாட தொடங்கிவிட்டனர். உதவி இயக்குநர் செல்வா என்பவர், பிகில் படத்தின் கதை தன்னுடையது என்றும், படத்துக்கு தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

காப்புரிமை

காப்புரிமை

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உதவி இயக்குநர் செல்வா, பிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர அனுமதி அளித்துள்ளது. மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகுமாறு உயர் நீதிமன்றம் மனுதாரரான செல்வா தரப்புக்கு அறிவுறுத்தியுள்ளது.

பெரும் பின்னடைவு

பெரும் பின்னடைவு

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு படக்குழுவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை, காப்புரிமை என்பதால் செல்வா வாபஸ் பெற்று உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தார்.

சிக்கல் ஏற்படும்

சிக்கல் ஏற்படும்

ஒருவேளை செல்வா காப்புரிமை கோரி வழக்கு தொடர்ந்தால் வழக்கு விசாரணைக்காக படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் வரும் வெள்ளிக்கிழமை பிகில் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படும் தெரிகிறது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

ஏற்கனவே பிகில் படத்திற்கு இறைச்சிக்கடை சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். இசை வெளியீட்டு விழாவில் விஜய் கூறிய பூக்கடை கதையால் பூக்கடைகாரர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிகில் படத்திற்கு தொடரும் சிக்கல்களால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X