நிதி நெருக்கடியில் இருக்கிறேன்.. அவகாசம் கேட்ட மன்சூர் அலிகான்.. நீதிமன்றம் அனுமதி!
சென்னை: நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையானதை அடுத்து, அவர் மன்னிப்பு கேட்டிருந்தார். இதையடுத்து, மன்சூர் அலிகான், நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம் சாட்டி, த்ரிஷா, குஷ்பு மற்றும் சிரஞ்சீவி மீது வழக்கு பதிவு செய்திருந்தார். விளம்பர நோக்கத்திலும் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி நடிகர் மன்சூர் அலிகானுக்கு நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்திருந்தது. அபராதம் செலுத்த போதுமான நிதி தற்போது இல்லை என மன்சூர் அலிகான் கூறியதை அடுத்து நீதிமன்றம் அவருக்கு அவகாசம் அளித்துள்ளது.
சரக்கு திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய, மன்சூர் அலிகான், லியோ படத்தில் திரிஷாவை நான் கண்ணாலக்கூட பார்க்கவில்லை, அவருடன் ஒரு பெட்ரூம் சீன் இருக்கும் என்று நினைத்தேன் அது இல்லாமல் போய்விட்டது என பேசி இருந்தார். மன்சூர் அலிகானின் இந்த மோசமான பேச்சுக்கு நடிகை த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மன்சூர் அலிகான் த்ரிஷா: இதையடுத்து, மன்சூர் அலிகான் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் சர்ச்சை பேச்சு குறித்து விசாரணைக்கு நேரில் ஆஜராகக்கோரி மன்சூர் அலிகானுக்கு போலீசார் சம்மன் அனுப்பியதை அடுத்து அவர் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுத்த மன்சூர் அலிகான், த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு, அறிக்கை வெளியிட்டார்.
ஒரு லட்சம் அபராதம்: இதையடுத்து, நடிகைகள் த்ரிஷா, குஷ்பு மற்றும் சிரஞ்சீவிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பெண் நடிகர் குறித்துத் அவதூறாக கருத்துத் தெரிவித்திருப்பதற்கு எதிராக மற்ற நடிகர்கர் பேசியது இயல்பானது. அதனால் மானநஷ்ட வழக்கு தொடர அனுமதிக்க முடியாது என தெரிவித்துத் ,அவதூறாக கருத்துத் தெரிவித்த மன்சூர் அலிகானுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் வித்திருந்தார்.
நிதி நெருக்கடியில் இருக்கிறேன்: இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்ததை அடுத்து, மன்சூர் அலிகான் தரப்பு வழக்கறிஞர் தற்போது நிதி நெருக்கடியில் இருப்பதால் பெரும் தொகையான ஒரு லட்சட் ரூபாயை செலுத்துவதற்கு பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என்று மன்சூர் அலிகான் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டட் து. இதை கேட்டட் நீதிபதி ஒருவரை பற்றி கருத்துத் தெரிவிக்கும் முன்பு அதனால் ஏற்படும் தாக்கத்தை உணர்ந்து து செயல்பட வேண்டும் என்று அறிவுரை கூறி, மன்சூர் அலிகானுக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கி விசாரணையை பிப்ரவரி 5-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











