twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொகுசு கார் வரிவிலக்கு தொடர்பான மேல்முறையீடு.. விஜய்யின் கோரிக்கையை ஏற்றது சென்னை ஹைகோர்ட்!

    |

    சென்னை: கொகுசு கார் வரிவிலக்கு தொடர்பான மேல்முறையிட்டு வழக்கை தீர்ப்பு நகலின்றி விசாரிக்க நடிகர் விஜய் கோரிய மேல்முறையீட்டை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

    நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை இறக்குமதி செய்தார்.இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அனுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது.

    பிரியாமணியின் திருமணம் செல்லாது...வழக்கு தொடர்ந்த முஸ்தஃபாவின் முதல் மனைவி பிரியாமணியின் திருமணம் செல்லாது...வழக்கு தொடர்ந்த முஸ்தஃபாவின் முதல் மனைவி

    இதையடுத்து, காரை இறக்குமதி செய்த போது, இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என விஜய் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    கடுமையான விமர்சனம்

    கடுமையான விமர்சனம்

    இந்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என கடுமையான கருத்துக்களை தெரிவித்தார்.

    விஜய்க்கு அபராதம்

    விஜய்க்கு அபராதம்

    மேலும், நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

    விஜய் மேல்முறையீடு

    விஜய் மேல்முறையீடு

    இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் கடந்த வெள்ளிக்கிழமை மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு நுழைவு வரி விலக்கு அளிக்க கோரி பல வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் விலக்கு கோரியதாகவும், இந்தியாவுக்குள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு மதிப்புக்கூட்டப்பட்ட வரி செலுத்தாமல் காரை கொண்டு செல்லவே நுழைவு வரி விதிக்கப்படுகிறது என்பதாலும் விலக்கு கேட்டதாக விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    கருத்துக்களை நீக்க வேண்டும்

    கருத்துக்களை நீக்க வேண்டும்

    அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தனி நீதிபதியின் விமர்சனங்களை நீக்கக்கோரியும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த மேல்முறையீட்டு மனுவை எண்ணிட்டு விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிடக் கோரியும் விஜய் தரப்பில் கூடுதல் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 19ஆம் தேதி நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    Recommended Video

    வீட்டுக்கு போனா கைய தூக்க முடியாது | Sarpatta | Actor Arya Exclusive | Filmibeat Tamil
    வேறு பெஞ்சுக்கு மாற்றம்

    வேறு பெஞ்சுக்கு மாற்றம்

    அப்போது நீதிபதிகள் விஜய் மேல்முறையீட்டு மனுவை வரி தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தனர். இந்நிலையில் சொகுசு கார் வரிவிலக்கு தொடர்பான மேல்முறையிட்டு வழக்கை தீர்ப்பு நகலின்றி விசாரிக்க நடிகர் விஜய் கோரிய மேல்முறையீட்டு மனுவை சென்னை ஹைகோர்ட் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

    பதிவுத்துறைக்கு உத்தரவு

    பதிவுத்துறைக்கு உத்தரவு

    விஜய்யின் மேல்முறையீட்டு மனுவை தீர்ப்பு நகலின்றி விசாரணைக்கு பட்டியலிடும் பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே வழக்கு விசாரணையை வரும் திங்கட் கிழமைக்கு ஒத்திவைக்குமாறு விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    English summary
    The Chennai High Court has accepted the petition filed by actor Vijay seeking a hearing on the luxury car tax exemption without a copy of the judgment.The Chennai High Court has directed the registrar to list Vijay's appeal without a copy of the judgment.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X