சித்ரா தற்கொலை வழக்கு.. போதிய ஆதாரம் இல்லை.. விடுதலையான கணவர்.. ஹேம்நாத்திடம் மீண்டும் விசாரணையா?

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் இருந்து நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சித்ராவின் தந்தை காமராஜ் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு குறித்து சித்ராவின் கணவர் ஹேம்நாத் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜே சித்ரா கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 9ந் தேதி சென்னை நசரத் பேட்டையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நடிகை சித்ரா ஹேம்நாத் என்பவரை காதலித்து பதிவு திருமணம் செய்திருந்தார்.

chithra hemanth chennai high court

திருமணமாகி 3 மாதத்திற்குள்ளேயே கணவருடன் தங்கியிருந்த சித்ரா தனது உயிரை மாய்த்துக்கொண்டது அனைவரையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. சித்ரா தற்கொலையை அடுத்து, ஹேம்நாத் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து 3 மாதங்களுக்கு முன்பு வெளியே வந்தார் ஹேம்நாத்.

விஜே சித்ரா தற்கொலை: இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் குற்றம் சாட்டப்பட்ட ஹேம்நாத் மீது குற்றப்பத்திரிக்கையை திருவள்ளூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதையடுத்து, வழக்கு விசாரணை நிறைவடைந்து இன்று ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் போதிய ஆதாரம் இல்லாததால் நடிகை சித்ரா கணவர் ஹேம்நாத்தை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை கேட்ட நடிகை சித்ராவின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

உயர்நீதிமன்றம் நோட்டீஸ்: இதையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து போலீஸாரும் சித்ராவின் குடும்பத்தினரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில், அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களை முறையாக கவனித்தில் கொள்ளாமல் மகளிர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார், இன்த மனு குறித்து ஹேம்நாத் பதிலளிக்குமா உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் ஐந்தாம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X