3 நாளில் ரிலீஸ்... விஷாலின் சக்ரா படத்தை வெளியிட கோர்ட் தடை...அதிர்ச்சியில் படக்குழு
சென்னை : நடிகர் விஷால் நடித்த சக்ரா படத்திற்கு எதிராக டிரைடன் ஆர்ட்ஸ் ரவி என்ற தயாரிப்பாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கில் நடிகர் விஷால் தயாரிப்பில் உருவாகியுள்ள சக்கரா திரைப்படத்தின் கதையை அப்படத்தின் இயக்குனர் ஆனந்தன் தன்னிடம் தெரிவித்து படத்தை தயாரிக்க ஒப்பந்தம் போட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
தன்னிடம் சக்ரா படத்தின் கதையை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் செய்துவிட்டு, தற்போது விஷால் தயாரிப்பில் அவர் நடிப்பில் தயாரித்துள்ளதாகவும், இது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் , தங்கள் தரப்பிடம் காப்புரிமை உள்ள நிலையில் சக்ரா படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.கார்த்திகேயன், இந்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். வழக்கு குறித்து நடிகர் விஷால் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.
விஷால் நடித்துள்ள சக்ரா படம் பிப்ரவரி 19 ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீசுக்கு 2 நாட்களே உள்ள நிலையில் படத்திற்கு கோர்ட் தடை விதித்துள்ளதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











