twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வலிமை படத்துக்கு புதிய சிக்கல்...தயாரிப்பாளர் போனிகபூர், எச்.வினோத்துக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

    |

    சென்னை : வலிமை படத்தின் கதை, கதாபாத்திரங்களை வேறொரு படத்திலிருந்து பயன்படுத்தியதாக தயாரிப்பாளர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் போனி கபூர், எச்.வினோத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    மேலும் ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இதுகுறித்து விளக்கமளிக்க வலிமை படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    வலிமை, எதற்கும் துணிந்தவன்...நாளை மாறன் ரிலீஸ்...ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான் வலிமை, எதற்கும் துணிந்தவன்...நாளை மாறன் ரிலீஸ்...ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்

    அஜித்தின் வலிமை படம்

    அஜித்தின் வலிமை படம்

    நடிகர் அஜித் நடிப்பில் கடந்த மாதத்தில் திரையரங்குகளில் வெளியான படம் வலிமை. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளானது. வசூல் மழையை பொழிந்துள்ளது. இந்த கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக அடுத்த படத்திற்கு இணையவுள்ளது.

     மெட்ரோ படத் தயாரிப்பாளர் வழக்கு

    மெட்ரோ படத் தயாரிப்பாளர் வழக்கு

    இந்நிலையில், வலிமை திரைப்படத்தின் கதை, கதாபாத்திரங்கள், தங்களின் மெட்ரோ படத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறி, அந்த படத்தை தயாரித்த ஜே.கே.கிரியேஷன்ஸ் நிறுவன உரிமையாளர் ஜெயகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    கதை, கதாபாத்திரங்கள் திருட்டு என புகார்

    கதை, கதாபாத்திரங்கள் திருட்டு என புகார்

    மெட்ரோ படத்தில் வசதியான வாழ்வுக்காக, சங்கிலி பறிப்பு, போதைப் பொருள் கடத்தலில் தம்பிக்கு தொடர்புள்ளதை அறிந்து கொள்ளும் கதாநாயகன், தம்பியை கொல்வது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாரிக்க உள்ள நிலையில், அதே கதை, கதாபாத்திரங்களுடன் வலிமை படமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    ரூ.1 கோடி கேட்டு வழக்கு

    ரூ.1 கோடி கேட்டு வழக்கு

    இதனால் தங்கள் நிறுவனத்திற்கு பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
    இது காப்புரிமைச் சட்டத்துக்கு எதிரானது என்பதால், வலிமை படத்தை சாட்டிலைட் சேனல், ஓடிடி தளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கேட்கப்பட்டுள்ளது.

    விளக்கமளிக்க உத்தரவு

    விளக்கமளிக்க உத்தரவு

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, மார்ச் 17ம் தேதிக்குள் மனுவுக்கு பதிலளிக்கும்படி, வலிமை பட தயாரிப்பாளர் போனிகபூர், இயக்குனர் வினோத் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார். வலிமை படம் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Chennai HC notice to Boney kapoor and H Vinoth on Metro movie case
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X