twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தலைவி படத்துக்கு தடை கோரிய வழக்கு.. படப்பிடிப்பு நடைபெறாததால் விசாரணையை ஒத்திவைத்தது ஹைகோர்ட்!

    By Sivam
    |

    சென்னை: ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் எடுக்கப்படும் தலைவி படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு காரணமாக மூன்று மாதம் நிறுத்தி வைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டதால் தடை கோரிய வழக்கு விசாரணை ஜூலை மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் கங்கனா ரனாவத் நடிக்கும் தலைவி என்ற தமிழ் படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் "குயின்" என்ற இணையதள தமிழ் தொடரை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனும் இயக்கி வெளியிட்டிருந்தார்.

    Chennai high court postponed the Thalaivi movie case hearing to July

    இந்நிலையில் தன் அனுமதியில்லாமல் எடுக்கப்பட்ட தலைவி, ஜெயா, குயின் ஆகிய படங்கள், இணையதள தொடருக்கு தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகளான ஜெ.தீபா உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கை தனி நீதிபதி, தள்ளுபடி செய்ததையடுத்து, தீபா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கும், தனது வாழ்க்கைக்கும் பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் கொரோனா ஊரடங்கு, காரணமாக படப்பிடிப்புகள் ஏதும் நடைபெறவில்லை என்றும் மூன்று மாதமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியமில்லை, ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

    அங்க ஜாக்கெட் போடணும்.. கலர் பூசி கவர் பண்ணக் கூடாது.. வைரலாகும் நிர்வாண அழகியின் ஹாட் போட்டோஸ்!அங்க ஜாக்கெட் போடணும்.. கலர் பூசி கவர் பண்ணக் கூடாது.. வைரலாகும் நிர்வாண அழகியின் ஹாட் போட்டோஸ்!

    Recommended Video

    Thalaivi Massive Loss: குமுறும் தயாரிப்பாளர் | 5 Crores set Damaged

    தீபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சாய்குமரன் இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். இதையடுத்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

    English summary
    Chennai high court has been postponed the Thalaivi movie case hearing to July. The movie shooting has been suspended for three months due to the curfew.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X