விஷாலின் சக்ரா நாளை ரிலீஸ்...தடையை நீக்கியது சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை : நடிகர் விஷால் நடித்த சக்ரா படத்திற்கு எதிராக டிரைடன் ஆர்ட்ஸ் ரவி என்ற தயாரிப்பாளர், சக்கரா படத்தின் கதையை இயக்குனர் ஆனந்தன் தன்னிடம் தெரிவித்து படத்தை தயாரிக்க ஒப்பந்தம் போட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Chennai High Court withdraws stay order against release of vishal starring chakra film

தன்னிடம் தயாரிப்பதற்கு ஒப்பந்தம் செய்துவிட்டு, தற்போது விஷால் தயாரிப்பில் அவர் நடிப்பில் தயாரித்துள்ளதாகவும், இது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது என்று மனுவில் குறிப்பிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.கார்த்திகேயன், இந்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து பிப்ரவரி 16 ம் தேதி உத்தரவிட்டார். வழக்கு குறித்து நடிகர் விஷால் பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.

சக்ரா படம் பிப்ரவரி 19 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக ஏற்கவே தேதி அறிவிக்கப்பட்டதால், தடையை நீக்கக் கோரி விஷால் தரப்பில் கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், சக்ரா படத்தின் ரிலீசுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் மார்ச் 5 வரையிலான தியேட்டர் வசூல் தொகை குறித்து, மார்ச் 10 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என விஷால் தரப்பிற்கு கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதை அடுத்து, திட்டமிட்டபடி சக்ரா நாளை தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X