ஃபேஸ்புக், வாட்ஆப்பே கதின்னு இருக்கிறீர்களா?: நடிகை ஆர்த்தி சொல்வதை கேளுங்க
சென்னை: ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப்பே கதி என்று கிடப்பவர்களுக்கு சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்று சிகிச்சை அளிப்பதாக நடிகை ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் இல்லாமல் மக்களால் இருக்க முடியவில்லை. சிறிது நேரம் வாட்ஸ்ஆப் வேலை செய்யவில்லை என்றால் அதை பற்றி ட்வீட்டி ட்விட்டரை கிறுக்கு பிடிக்க வைக்கிறார்கள்.

ஃபேஸ்புக்கே கதி என்று இருப்பவர்கள் பலர். தற்போது யாரையாவது டேக் செய்வது ஒரு வேலையாக வைத்துள்ளனர். தெருவில் நடந்து செல்லும்போது கூட வாட்ஸ்ஆப்பில் சாட் செய்து கொண்டே செல்கிறார்கள்.
அப்படி சாட் செய்து கொண்டே சென்று வீடு மாறி போன சம்பவங்களும் நடந்துள்ளது. இந்நிலையில் நடிகை ஆர்த்தி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக்கே கதி என்று இருப்பவர்களுக்கு சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்று சிகிச்சை அளிக்கிறது என்று கூறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











