twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிப்ரவரி 18...சென்னையில் சர்வதேச திரைப்பட விழா...எஸ்பிபி.,ஐ கவுரவிக்க திட்டம்

    |

    சென்னை : கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் பல திரைப்பட விழாக்கள் ஆன்லைன் வழியாக தான் நடத்தப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற வேண்டிய சென்னை சர்வதேச திரைப்பட விழா, கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.

    Chennai International Film Festival to have masterclass by top film technicians

    பிப்ரவரி 18 ம் தேதி துவங்க உள்ள சென்னை திரைப்பட விழாவிற்கான களப்பணிகள் நிறையவடையும் நிலையில் உள்ளன.

    இது பற்றி சென்னை சர்வதேச திரைப்பட விழா கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான ஏவிஎம் சண்முகம் கூறுகையில், அனைத்தும் சகஜ நிலைக்கு திரும்பி வருகிறது. தியேட்டர்களில் 100 சதவீதம் இருக்கைகளை நிரப்பிட அரசு அனுமதி அளித்துள்ளது.

    Chennai International Film Festival to have masterclass by top film technicians

    அதனால் திரைப்பட திருவிழாவை பாதுகாப்பான முறையில் நடத்த முடிவு செய்தோம். அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி, சமூக இடைவெளியை பின்பற்றி இதனை நடத்த உள்ளோம் என்றார்.

    இந்த ஆண்டு சென்னை திரைப்பட விழாவில் புதிய அறிமுகமாக சினிமா துறைக்கு தங்களின் சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களுக்கு மாஸ்டர்கிளாஸ் வழங்கப்பட உள்ளது. இது பற்றி ஏவிஎம் சண்முகம் கூறுகையில், கே.வி.ஆனந்த், ஸ்ரீநிவாஸ் மோகன், அருள் மூர்த்தி, பாலாஜி மோகன், இசையமைப்பாளர் இமான் உள்ளிட்டோர் இந்த மாஸ்டர் கிளாசில் இடம்பெற உள்ளனர் என்றார்.

    மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கவுரவம் செலுத்தவும் திட்டமிட்டுள்ளோம். திறப்பு விழாவன்று பல சிறப்பு நிகழ்வுகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    Chennai International Film Festival (CIFF), which was pushed from December last year to this February due to the pandemic, will be a complete on-ground event. The fest will kickstart on February 18.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X