லிங்கா ஆடியோ ரிலீஸ்... சத்யம் தியேட்டரில் தள்ளுமுள்ளு - ரஜினி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி!
சென்னை : லிங்கா படத்தின் ஆடியோ ரிலீசை முன்னிட்டு சென்னை சத்யம் தியேட்டரில் திரண்டிருந்த ரஜினி ரசிகர்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர போலீசார், ரஜினி ரசிகர்கள் மீது தடியடி நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கோச்சடையான் படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் லிங்கா. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், அடுத்தமாதம் ரிலீசாக உள்ளது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா என இரு நாயகிகள்.
இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் இன்று சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்று வருகிறது.

ரஜினி....
இந்த விழாவில் ரஜினியும் பங்கேற்றார். இது தொடர்பாக தகவல் அறிந்த அவரது ரசிகர்கள் காலை முதலே சத்யம் தியேட்டர் வளாகத்தில் குவியத் தொடங்கினர்.

ஆவல்...
எப்படியும் ரஜினியை நேரில் பார்த்து விட வேண்டும் என்ற ஆவலில் தொடர்ந்து ரசிகர்கள் அங்கு குவிந்ததால் கூட்டத்தைச் சமாளிக்க போலீசார் திணறினர்.

தள்ளுமுள்ளு...
ஒரு கட்டத்தில் ரசிகர்கள் கூட்டத்தில் திடீர் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், பலர் நெரிசலில் சிக்கிக் கொண்டனர்.

தடியடி...
எனவே, ரஜினி ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். பின்னர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


Click it and Unblock the Notifications











