twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வைகோ, பாரதிராஜா, தங்கர்பச்சான், கவிஞர் தாமரை உள்ளிட்டோர் மீது திடீர் வழக்கு

    By Sudha
    |

    Vaiko, Bharathiraja and Thangar Bachchan
    சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் அனுமதியில்லாமல் பொதுக்கூட்டம் நடத்தியதாக கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இயக்குநர்கள் பாரதிராஜா, தங்கர்பச்சான், கவிஞர் தாமரை உள்ளிட்ட10 பேர் மீது திடீரென சென்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    மே 17 இயக்கம் சார்பில் சென்னை மெரீனா கடற்கரையில் நேற்று பொதுக் கூட்டம் நடந்தது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்காக இந்த பொதுக்கூட்டம் நடந்தது.

    இந்தநிலையில் வைகோ, பாரதிராஜா, தங்கர்பச்சான், கவிஞர் தாமரை உள்ளிட்ட 10 பேர் மீது திடீரென சென்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    மெளன ஊர்வலம் என அனுமதி வாங்கி விட்டு பொதுக் கூட்டம் நடத்தியதாக கூறி இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

    இந்தக் கூட்டத்தில் பேசிய தங்கர்பச்சான், கேரளாவில அரசியல் தலைவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஆனால் இங்கு அப்படி இல்லை, தனித் தனியாக இருக்கிறார்கள் என்று கடுமையாக சாடியிருந்தார். அதேபோல வைகோ பேசுகையில் தமிழகத்தின் உதவி இல்லாவிட்டால் கேரள மக்களால் வாழவே முடியாது என்று ஆவேசமாக கூறியிருந்தார். பாரதிராஜா பேசுகையில் தமிழ் சினிமாத்துறையினரை குறிப்பாக நடிகர்களை கடுமையாக சாடியிருந்தார். நடிகர் சங்கத் தலைவராக தற்போது இருப்பவர் சரத்குமார் என்பது நினைவிருக்கலாம்.

    தமிழக அரசின் இந்த திடீர் வழக்கு நடவடிக்கையால் தமிழ் ஆர்வலர்கள் குறிப்பாக முல்லைப் பெரியாறுக்காக போராடி வரும் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    English summary
    Chennai police have booked Vaiko, Bharathiraja, Thangar Bachchan and 7 others for holding meeting in Chennai Marina beach yesterday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X