அப்ளாஸை அள்ளும் சென்னை போலீஸ் வெளியிட்டுள்ள ஷார்ட் ஃபிலிம்.. தீயாய் பரவும் வீடியோ!

சென்னை: சென்னை போலீஸ் வெளியிட்டுள்ள குறும்படம் மக்களின் பாராட்டை பெற்று வருகிறது.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பெண்கள் அவசர காலங்களில் உதவி கேட்க பல்வேறு செயலிகளையும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ள காவலன் செயலி எப்படி பெண்களுக்கு உதவுகிறது என்பது குறித்து குறும்படம் ஒன்றை சென்னை போலீஸார் வெளியிட்டிருக்கின்றனர்.

இளம்பெண்

இளம்பெண்

அதில் இரவு நேரத்தில் பணி முடிந்து வீடு திரும்பும் இளம்பெண் ஒருவர் தனது வண்டி பழுதால் நடு வழியில் மாட்டிக்கொள்கிறார். அப்போது இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்கின்றனர்.

இருக்கும் இடத்திற்கு

இருக்கும் இடத்திற்கு

இதனால் அச்சமடைந்த அந்த பெண் காவலன் செயலியின் மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, நேராக அந்த பெண் இருக்கும் இடத்திற்கே வருகின்றனர் போலீசார்.

இளைஞர்கள் கைது

இளைஞர்கள் கைது

பின்னர் அந்த பெண்ணை மீட்டு அவரது வீட்டில் கொண்டு சென்று விடுகின்றனர். போலீஸை பார்த்து தப்பியோடிய இளைஞர்களையும் பிடித்து கைது செய்கின்றனர்.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

இப்படியாக முடிகிறது அந்த குறும்படம். சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள இந்த குறும்படத்திற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

காவல்துறைக்கு நன்றி

இந்த வேகம் நிஜமாகவே நடந்தால் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.. தமிழ் நாடு காவல்துறைக்கு நன்றி.. என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

போற்றுதலுக்குரியவை

பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் ஒவ்வொரு செயல்களும் பெருமைக்குரியவை மற்றும் போற்றுதலுக்குரியவை.. காவல்துறையினருக்கு நன்றி. என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X