பிரசாத் ஸ்டூடியோ மீது இளையராஜா கொடுத்த பரபரப்பு புகார்.. சென்னை போலீஸ் எடுக்கும் நடவடிக்கை என்ன?

சென்னை: பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தின் மீது இசையமைப்பாளர் இளையராஜா கொடுத்த புகாரின் பேரில் சென்னை போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 42 வருடங்களாக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை, வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டூடியோ ரெக்கார்டிங் தியேட்டரில் தான் இசை பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

நிலப் பிரச்சனை

நிலப் பிரச்சனை

கடந்த ஆண்டு, நிலம் சம்பந்தமான பிரச்சனை இளையராஜா மற்றும் பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் சாய் பிரசாத் இடையே பூதாகரமாக வெடித்தது. இளையராஜாவின் ரெக்கார்டிங் தியேட்டரை இடித்து விட்டு, புதிதாக ப்ரிவ்யூ தியேட்டர் ஒன்றை பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் கட்ட முயற்சிகளை எடுத்து வருகிறது.

வழக்கு

வழக்கு

ஸ்டூடியோவை காலி செய்ய வேண்டும் என பிரசாத் ஸ்டூடியோ வலியுறுத்தியதற்கு எதிராக இயக்குநர் பாரதிராஜா மற்றும் சினிமா கலைஞர்கள் தலைமையில் போராட்டங்களும் நடந்தன. பின்னர், இது தொடர்பாக இளையராஜா கொடுத்த புகாரின் பேரில், வழக்கு ஒன்றும் நடைபெற்று வருகிறது.

இசைக் கருவிகள்

இசைக் கருவிகள்

இந்நிலையில், இந்த லாக்டவுனை பயன்படுத்திக் கொண்டு, இளையராஜாவின் அறையில் உள்ள விலை உயர்ந்த இசைக்குறிப்புகள் மற்றும் இசைக் கருவிகளை உரிமையாளர் சாய் பிரசாத், கள்ளச்சாவி போட்டு, திருடி உள்ளதாகவும், சில இசைக் கருவிகள் காணாமல் போயுள்ளதாகவும், கடந்த வெள்ளிக்கிழமை இளையராஜா தரப்பில் இருந்து சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்று கொடுக்கப்பட்டது.

Recommended Video

Mouna Ragam movie explained | ManiRatnam | Ilayaraja | PC Sreeram
நேரடியாக விசாரணை

நேரடியாக விசாரணை

இந்நிலையில், இளையராஜாவின் புகார் தொடர்பாக, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நாளை (திங்களன்று) நேரடியாக சென்று விசாரணை நடத்த சென்னை போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இளையராஜாவின் ரெக்கர்டிங் தியேட்டரில் சோதனை நடத்தி, இசைக் குறிப்புகள் மற்றும் இசைக் கருவிகள் சேதப்படுத்தப்பட்டதா என்றும் விசாரிக்க உள்ளதாக தகவல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X