அஜித், பொது நிகழ்ச்சிக்கு ஏன் வருவதில்லை? இதுதான் காரணமாம்... போட்டோ போட்டு விளக்கிய பைக் ரேஸர்!
சென்னை: நடிகர் அஜித், பொது நிகழ்ச்சிகளுக்கு ஏன் வருவதில்லை என்பதை போட்டோ போட்டு விளக்கம் அளித்துள்ளார் பிரபல பைக் ரேஸர்.
நடிகர் அஜித் எதிலும் வித்தியாசமானவர். எந்த சினிமா விழாக்களுக்கும் அவர் வருவதில்லை. அவர் நடித்த படங்களின் புரமோஷனுக்குக் கூட வருவதில்லை.
ஆனால், ஓட்டு போடுவதற்கு வரிசையில் நிற்பார். அவர் குழந்தைகளின் ஸ்கூல் விழாக்களுக்கு செல்வார்.

விழாக்களுக்கு
நெருங்கியவர்கள் வீட்டு விழாக்கள் என்றால் சத்தம் போடாமல் வந்து ஹாய் என்பார். இதுதான் அஜித் ஸ்டைல். அவர் விழாக்களுக்கு வராததற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்லி வருகிறார்கள். சிலர், அஜித் போன்ற பெரிய நடிகர்கள், தங்கள் படங்களின் புரமோஷனுக்காவது வர வேண்டும் என்று கூறி வருகின்றனர். அப்படி வந்தால் படம் இன்னும் ஹிட்டாகும் என்கிறார்கள்.
ரசிகர்கள் சூழ்வார்கள்
ஆனால், அஜித் வருவதில்லை. அவர் சினிமா ஷூட்டிங், ஏர்போர்ட் என எங்கு சென்றாலும் ரசிகர்கள் மொய்த்து விடுகிறார்கள். இதனால் தேவையில்லாமல் அவர் வீட்டை விட்டு கூட வெளியே வருவதில்லை என்றும் சொல்கிறார்கள், அவருக்கு வேண்டியவர்கள். இந்நிலையில், பிரபல பைக் ரேஸர் அலிஷா அப்துல்லா, 'அஜித் ஏன் வெளியே வருவதில்லை? என்று விளக்கம் அளித்துள்ளார்.

கார் ரேஸில் அஜித்
இவர், பிரபல பைக் ரேஸர் அப்துல்லாவின் மகள். அப்துல்லாவும் அஜித்தும் ஒன்றாக, பைக் ரேஸில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அலிஷா, அஜித் பற்றி புகைப்படங்களை வெளியிட்டு ட்வீட் செய்துள்ளார். அது, அஜித் கார் ரேஸில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்டவை. அதில் பெருங்கூட்டத்துக்கு நடுவில் பாதுகாப்பாக சென்றபடி இருக்கிறார் அஜித்.
தனியாக விடமாட்டார்கள்
'அஜித் பொது இடங்களுக்கு வராததற்கு காரணம் மக்கள், அவரைத் தனியாக விடமாட்டார்கள் என்பதால்தான். இது ரேஸ் ட்ராக்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றின்போது எடுக்கப்பட்ட போட்டோ. அவரை நடக்கக்கூட மக்கள் விடவில்லை' என்று கூறியுள்ளார். இதே போல மற்றொரு போட்டோவையும் பதிவு செய்துள்ளார். அதிலும் ரசிகர்கள் அவரை மொய்க்கின்றனர்.

நகர முடியவில்லை
'இது இன்னொரு புகைப்படம். அவரால் ஒரு இன்ச் கூட நகர முடியவில்லை. இதுதான் கடைசி நாள். இப்போதிருந்துதான் அவர் வெளியே வர வேண்டாம் என்று முடிவு செய்தார்' என்று தெரிவித்துள்ளார். இந்த ட்விட், சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏராளமானோர் இதை லைக் செய்துள்ளனர். பலர் ரீட்விட் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











