வேட்டையன் வசூலுக்கு வேட்டு வைத்த கனமழை.. எல்லாமே பச்சை நிறம்.. தப்பித்த சூர்யாவின் கங்குவா!
சென்னை: லைகா நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ராவ் ரமேஷ், ரக்சன் உள்ளிட்ட பலர் நடித்த வேட்டையன் திரைப்படத்தை ஜெய்பீம் படம் இயக்கிய த.செ. ஞானவேல் இயக்கி இருந்தார்.
ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையை குறி வைத்து வேட்டையன் திரைப்படம் ரிலீஸ் ஆன நிலையில் முதல் நான்கு நாட்கள் திரையரங்குகளில் நல்ல வசூல் வேட்டையை அந்த படம் பெற்றது. சுமார் 240 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த் வீடு திரும்பிய நிலையில் வேட்டையன் படத்தின் சக்சஸ் மீட்டில் சந்தித்த புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. ஆனால், 5வது நாளான நேற்று முதல் வேட்டையன் படத்துக்கு தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை மிகப்பெரிய வேட்டு வைத்துள்ளது.
240 கோடி வசூல்: வேட்டையன் திரைப்படம் கன்டென்ட் மற்றும் கமர்ஷியல் மாஸ் படமாக வெளியான நிலையில், தொடர்ந்து படம் தீபாவளி வரை ஓடும் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என திருப்பூர் சுப்ரமணியம் உள்ளிட்ட பிரபலங்கள் கருத்து தெரிவித்தனர். லைகாவுக்கு கைகொடுக்கும் விதமாக முதல் 4 நாட்களில் 240 கோடி வசூலை வேட்டையன் படம் ஈட்டியுள்ளது. ஆனால், இதற்கு பிறகு வேட்டையன் படத்தின் வசூல் அதிகரிக்குமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் கனமழை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. வேட்டையன் படத்தின் 5வது நாளிலேயே கனமழை காரணமாக பெரிய சிக்கல் வந்துள்ளது. 2வது வாரம் தமிழ்நாட்டில் மழை வெள்ள பாதிப்புகள் தான் மிஞ்சி நிற்கும் என்கிற நிலைமையில் வேட்டையன் வசூல் 300 கோடியை கூட தொடாது என்கின்றனர்.
லைகாவுக்கு லாபம் தான்: வேட்டையன் திரைப்படம் மழை வெள்ளம் காரணமாக 2வது வாரத்தில் அடிவாங்கினாலும் முதல் வாரத்திலேயே ரஜினிகாந்தின் ஸ்டார்டம் காரணமாக படத்தின் பட்ஜெட்டை விட அதிக வசூலை ஈட்டியுள்ளது. மேலும், அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து இந்த படத்தையும் பெரும் தொகை கொடுத்து வாங்கியிருக்கிறது. வேட்டையன் படம் லைகாவுக்கு லாபகரமான படம் தான் என்றும் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்க வேண்டிய படம் மழை காரணமாக தத்தளிப்பதாக பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தப்பித்த கங்குவா: சூர்யாவின் கங்குவா திரைப்படம் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ள நிலையில், ஆயுத பூஜைக்கு வந்தே தீருவேன் என சூர்யா அடம்பிடித்திருந்தால் வேட்டையன் மற்றும் கங்குவா என இரு படங்களும் வசூல் ரீதியாக பெரிய சிக்கலை சந்தித்து இருக்கும். சூர்யா பொறுமையாக நவம்பர் 14ம் தேதி கங்குவா படத்தை வெளியிட முடிவு செய்துள்ள நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா நினைப்பது போல 2000 கோடி வசூல் என்கிற இமாலய சாதனையை எட்டுகிறதா என்று பார்ப்போம். அடுத்த மாதம் புயல் ஏதும் வராமல் இருக்கணும் பெருமாச்சி!


Click it and Unblock the Notifications