»   »  கமல், ரஜினி, அஜீத் சென்ற கடைக்கு வந்த நிலைமையை பார்த்தீங்களா?

கமல், ரஜினி, அஜீத் சென்ற கடைக்கு வந்த நிலைமையை பார்த்தீங்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பட வீடியோ கேசட்டுகள், டிவிடிகளை வாடகைக்கு விடும் சென்னை டிக் டாக் கடை மூடு விழாவை கண்டுள்ளது.

சிங்கார சென்னையில் 30 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட பட வீடியோ கேசட், டிவிடி வாடகை கடை டிக் டாக். பட நூலகம் எனலாம். ரஜினிகாந்த், கமல் ஹாஸன், அஜீத் ஆகியோர் சென்று படங்களை வாடகைக்கு எடுத்துச் சென்ற கடை தற்போது மூடப்பட்டுள்ளது.

Chennai's famous movie library closed

இந்நிலையில் இது குறித்து கடை உரிமையாளர் பிரகாஷ் குமார் கூறுகையில்,

1983ம் ஆண்டு தூர்தர்ஷனை தவிர வேறு பொழுதுபோக்கு அம்சம் இல்லாதபோது பட நூலகங்கள் தான் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக இருந்தன.

நாங்கள் இந்த பட நூலகத்தை துவங்கிய புதிதில் கமல் ஹாஸன் அடிக்கடி வருவார். ஆனால் எப்பொழுதும் கடைக்கு வந்து சென்றவர் இயக்குனர் மணிரத்னம் தான்.

ஹோம் தியேட்டர்கள் வந்தபோது எங்கள் வியாபாரம் சூடுபிடித்தது. டிவிடிகளையும் நாங்கள் வாடைக்கு விட்டோம். பின்னர் இளைஞர்கள் படங்களை இன்டர்நெட்டில் டவுன்லோடு செய்யத் துவங்கியதும் வியாபாரம் டல்லடித்தது.

நெட்ப்ளிக்ஸ் மற்றும் அமேசான் போன்ற ஜாம்பவான்கள் வந்ததும் கடையை மூடுவது என்று முடிவு செய்தேன் என்றார்.

English summary
Popular movie rental shop in Chennai named Tic Tac is closed thanks to the advancement in Technology and internet usage.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil