twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வட சென்னையின் அடையாளம்.. 'இன்றே கடைசி'யானது பழமையான அகஸ்தியா தியேட்டர்.. ரசிகர்கள் வருத்தம்!

    By
    |

    சென்னை: வட சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கிய பழமையான, அகஸ்தியா தியேட்டர், நாளை முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது.

    Recommended Video

    TALKING 2 MUCH EP-09 | SPB SHORTFILM ENTRY ! | FILMIBEAT TAMIL

    கொரோனா காரணமாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதனால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. தியேட்டர்கள் திறக்கப்படவில்லை.

    பிரபல நடிகை ஜெனிலியாவுக்கு கொரோனா பாதிப்பு.. 'நோய்க்கான போராட்டம் எளிது.. தனிமைதான் கடும் சவால்'! பிரபல நடிகை ஜெனிலியாவுக்கு கொரோனா பாதிப்பு.. 'நோய்க்கான போராட்டம் எளிது.. தனிமைதான் கடும் சவால்'!

    தியேட்டர்கள்

    தியேட்டர்கள்

    இதன் காரணமாக, தியேட்டர் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நடந்து முடிந்த படங்களை தயாரிப்பாளர்கள், ஒடிடி தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். தியேட்டர்களை தொடங்க அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை. இதனால் தியேட்டர்கள் தொடர்ந்து இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    அகஸ்தியா திரையரங்கம்

    அகஸ்தியா திரையரங்கம்

    இந்நிலையில், வட சென்னை, தண்டார்பேட்டையில் உள்ள அகஸ்தியா திரையரங்கம், நாளை முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது. 1004 இருக்கைகள் கொண்ட சென்னையில் முதல் பெரிய தியேட்டரான இது, 1967 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இதில் முதல் படமாக, கே.பாலசந்தர் இயக்கத்தில் முத்துராமன், நாகேஷ், சவுகார் ஜானகி நடித்த பாமா விஜயம் திரையிடப் பட்டுள்ளது.

    அபூர்வ சகோதரர்கள்

    அபூர்வ சகோதரர்கள்

    எம்.ஜி.ஆர்.நடித்த 'உலகம் சுற்றும் வாலிபன், காவல்காரன், சிவாஜி நடித்த சிவந்த மண், சொர்க்கம் உள்பட பல படங்கள் 100 நாட்களுக்கு மேல் இங்கு ஓடியுள்ளன. ரஜினியின் பைரவி, ப்ரியா, உள்ளிட்ட படங்களும் கமலின் அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன் உள்பட பல படங்கள் வெள்ளிவிழா கண்டன. தமிழின் முன்னணி நடிகர்கள் பலரின் சினிமா படப்பிடிப்புகளும் இங்கு நடந்துள்ளது.

    நிரந்தரமாக மூட

    நிரந்தரமாக மூட

    கடந்த 53 ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த தியேட்டர், கடந்த 3 ஆண்டுகளாக வருமானம் இல்லாததால் கடும் நஷ்டத்தை சந்தித்து வந்தது. இதையடுத்து இந்த தியேட்டர் நிர்வாகம் நிரந்தரமாக மூட முடிவு செய்துள்ளது. வடசென்னையில் அடையாளங்களில் ஒன்றாக விளங்கிய அகஸ்தியா தியேட்டர் மூடப்படுவது ரசிகர்களிடையை வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இங்கு வணிக வளாகம் கட்டப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

    English summary
    Chennai's iconic theatre Agasthya to be permanently closed from september 1st.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X