அடடே.. வேற லெவல் போங்க.. ‘வலிமை’ மோஷன் போஸ்டரை வச்சு சிறப்பான சம்பவம் செய்த சென்னை எஸ்பி!

சென்னை: வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை சிறப்பான சம்பவம் செய்துள்ள சென்னை எஸ்பியை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் அப்டேட்டுக்காக கடந்த 2 ஆண்டுகளாக அஜித் ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியானது. இதில் க்ளீன் ஷேவ்வில் செம க்யூட்டாக உள்ளார் அஜித்.

பிரபலங்களும் கொண்டாட்டம்

பிரபலங்களும் கொண்டாட்டம்

வலிமை மோஷன் போஸ்டரை அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். பலரும் படத்தின் மோஷன் போஸ்டரை தங்களின் சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சென்னை எஸ்பி

சென்னை எஸ்பி

சமூக வலைதளங்களிலும் வலிமை ஹேஷ்டேக்கே ட்ரென்டிங்கில் உள்ளது. இந்நிலையில் சென்னை பெருநகர குற்ற புலனாய்வு எஸ்.பி அர்ஜுன் சரவணன், வலிமை படம் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு மாஸ் காட்டியுள்ளார்.

‘தலைக்கவசம், உயிர்க்கவசம்’

‘தலைக்கவசம், உயிர்க்கவசம்’

அதவாது, வலிமை படத்தின் மோஷன் போஸ்டரில் நடிகர் அஜித்குமார் தலைக்கவசம் அணிந்திருக்கும் புகைப்படத்தை, சென்னை பெருநகர குற்ற புலனாய்வு எஸ்.பி அர்ஜுன் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் 'தலைக்கவசம், உயிர்க்கவசம்' என பதிவிட்டு ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

பலனளிக்கும் பதிவு

பலனளிக்கும் பதிவு

எஸ்பி அர்ஜுன் சரவணனின் இந்த பதிவை பார்த்த பலரும், இளைஞர்கள் பலரும் சமூக வலைதளத்தில் உங்ளை பின்தொடரும் நிலையில் உங்களின் இந்த விழிப்புணர்வு பதிவு பலனளிக்கும் என்று பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அஜித் ரசிகரா?

அஜித் ரசிகரா?

சென்னை எஸ்பி அர்ஜுன் சரவணனின் இந்தப் பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் அஜித் ரசிகர்கள் பலரும், நீங்களும் அஜித் ரசிகரா சார் என்றும் வலிமை அப்டேட்டுக்காகதான் காத்திருந்தீர்களா என்றும் கேட்டு வருகின்றனர்.

Recommended Video

Yogi Babu Cricketer Natarajan சந்திப்பில் நடந்த செம்ம கலாட்டா | IPL
விழிப்புணர்வு அருமை சார்

விழிப்புணர்வு அருமை சார்

அர்ஜுன் சரவணனின் பதிவை பார்த்த இந்த நெட்டிசன், என்ன சார் நீங்களும் வலிமை அப்டேட்க்கு வெய்ட் பண்ணீங்களா..?? ஆனால்..!!
உங்களது இந்த வகையான விழிப்புணர்வு அருமை சார்..!!
அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் தவறாமல் அணிய வேண்டும்..!! என கூறியுள்ளார்.

வெய்ட் பண்ணியிருப்பார் போல

வெய்ட் பண்ணியிருப்பார் போல

மற்றொரு ரசிகரான இவர், சார்... சைலன்ட்டா.. அப்டேட்டுக்கு வெய்ட் பண்ணியிருப்பார் போல.. சந்தோஷமா பணியில் செயல் படுகிறார்.. என எஸ்பி அர்ஜுன் சரணனின் பதிவை குறிப்பிட்டு தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X